'ஜூன் மாதத்துக்குப் பிறகு ரஜினி கட்சி பெயர், கொடி அறிவிப்பு நிச்சயம்!'

ஒரு பிரமாண்ட மாநாடு நடத்தி, அதில் கட்சி விவரங்களை ரஜினி அறிவிப்பார். அது நிச்சயம் ஜூன் மாதத்துக்குப் பிறகுதான் நடக்கும் - ரஜினி தரப்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வட மாவட்டங்களுக்கு குறி வைக்கும் ரஜினி..வீடியோ

    சென்னை: தனது புதிய அரசியல் கட்சி மற்றும் கொடி விவரங்களை பிரமாண்ட மாநாடு கூட்டி ரஜினிகாந்த் அறிவிப்பார் என்றும், அது ஜூன் மாதம் அல்லது அதற்கு பிறகு நடக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    எதிர்ப்பு - விமர்சனங்கள்

    எதிர்ப்பு - விமர்சனங்கள்

    ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த டிசம்பர் 31-ம் தேதி அறிவித்தார். ஒரு பக்கம் அவருக்கு அமோகமாக ஆதரவு கிடைத்தாலும், பெரும் எதிர்ப்பும் விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன.

    சந்தேகம்

    சந்தேகம்

    ரஜினியை நல்லவர் என்று சொல்லும் நடுநிலையான மக்களும், அவரது அரசியல் வியூகங்கள் குறித்து பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். அதில் முக்கியமான சந்தேகம், ஏன் இவர் இன்னும் அரசியல் கட்சி பெயர், கொடியை அறிவிக்காமல் காலம் தாழ்த்துகிறார், ஒரு வேளை கட்சி அறிவிக்காமலே போய்விடுவாரோ, வேறு ஏதாவது ஒரு கட்சியின் சார்பு நிலை எடுப்பாரோ என்றெல்லாம் கேட்டு வருகின்றனர்.

    எல்லாம் தயார்

    எல்லாம் தயார்

    ஆனால் அவர் வேண்டுமென்று காலம் தாழ்த்தவில்லை என்றும், தனது கட்சிக்கான அடிப்படைக் கட்டமைப்புகளை பக்காவாகச் செய்து முடித்த பிறகே கட்சிப் பெயர், கொடி, கொள்கைகளை அறிவிக்க காத்திருக்கிறார் என்றும் அவரது நெருக்கமான ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

    கட்சி, கொடி

    கட்சி, கொடி

    கட்சியின் பெயரை ரஜினி கடந்த அக்டோபர் 2017லேயே தேர்வு செய்துவிட்டதாகவும், இப்போதுள்ள மன்றக் கொடியை விட, கச்சிதமாக புதிய கொடியை வடிவமைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

    ஜூன்

    ஜூன்

    கட்சி கொடி மற்றும் பெயரை நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந்தேதி அறிமுகம் செய்வார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் இமயமலையிலிருந்து வந்த கையோடு அந்த தகவலை மறுத்திருந்தார் ரஜினி.

    ஒரு பிரமாண்ட மாநாடு நடத்தி, அதில் கட்சி விவரங்களை ரஜினி அறிவிப்பார் என்றும், அது நிச்சயம் ஜூன் மாதத்துக்குப் பிறகுதான் நடக்கும் என்றும் ரஜினி தரப்பில் கூறப்படுகிறது.

    முக்கிய தலைகள்

    முக்கிய தலைகள்

    மேலும் அந்த மாநாட்டில் யாரும் எதிர்பாராத முக்கிய பிரமுகர்கள் சிலர் ரஜினியின் கட்சியில் இணைவார்கள் என்றும் அடித்துச் சொல்கிறார்கள்.

    மே 20 ம் தேதி ரஜினியை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தி காந்திய மக்கள் இயக்கம் மாற்று அரசியல் மாநாடு ஒன்றை கோவையில் நடத்துகிறது. ரஜினியின் முழு சம்மதத்தோடு நடக்கும் மாநாடு இது. எனவே இந்த மாநாட்டுக்குப் பிறகே ரஜினியின் அரசியல் அறிவிப்பு மாநாடு நடக்கும் என்பது உறுதி.

    - நமது சிறப்பு நிருபர்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+