கமல், விஜய், விஷால் பாணிக்கு மாறிய ரஜினி!
கமல், விஜய், விஷால் போல நடிகர் ரஜினி தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளார்.
சென்னை: நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை, விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் மாற்றியமைத்த நிலையில் நடிகர் ரஜினி ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றம் என மாற்றியமைத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். அவரது அரசியல் பிரவேச அறிவிப்புக்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்தது.
உலக நாயகன் கமலஹாசன் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றி அமைத்தார். இதே போன்று நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றங்களை, நற்பணி இயக்கங்களாக மாற்றியுள்ளார்.

விஷால் நற்பணி இயக்கம்
நடிகர் விஷால், திரையுலகிற்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, தனது ரசிகர் மன்றங்களை, நற்பணி இயக்கங்களாக மாற்றியமைத்துள்ளார். இந்த நற்பணி இயக்கத்தின் செயலாளராக ஜெயசீலன் என்பவரை நியமித்துள்ளார்.

விஜய் அரசியல் பிரவேசம்
நடிகர் விஜய்யும், தனது ரசிகர் மன்றங்களை, விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் மாற்றியமைத்த நிலையில், விரைவில் அவர் அரசியல் பிரவேசம் செய்ய இருப்பதாக அடிக்கடி செய்திகள் வெளியானது. தனது மகன் பற்றி அவரது தந்தை பல பேட்டிகளை கொடுத்துள்ளார். ஆனால் நேரடியாக அரசியலுக்கு வருவார் என்று கூறவில்லை.

மக்கள் மன்றமான ரசிகர் மன்றம்
நடிகர் ரஜினி தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றம் என மாற்றியமைத்துள்ளார். அரசியல் கட்சிக்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் இணையதளத்தில் பெயரை ரஜினி மாற்றியுள்ளார். ரஜினிக்கு முன்பாகவே பல நடிகர்கள் அரசியலுக்கு வரும் எண்ணத்தில் மக்கள் இயக்கமாக ரசிகர் மன்றங்களை மாற்றிய நிலையில் கமல், விஜய், விஷால் பாணியில் ரஜினியும் மாறியுள்ளார்.

லேட்டஸ்ட்
ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் லேட்டாக இருக்கலாம். ஆனால் அரசியல் வருகையை அறிவித்துவிட்டு லேட்டஸ்டாக பெயர் மாற்றம் கொண்டுவந்துள்ளார் என சிலாகிக்கிறார்கள் அவரது ரசிகர்கள். அப்படியானால், மக்கள் இயக்கம் என்ற பொருளில் நற்பணி மனற பெயர்களை மாற்றிய பிற நடிகர்களும் அரசியலுக்கு வரப்போகிறார்களா?
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications