திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்றா ரஜினி.. எப்படி.. தமிழருவி மணியன் விளக்கம்
அதிமுகவிற்கும் திமுகவிற்கும் மாற்றாக நடிகர் ரஜினிகாந்த் இருப்பார் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
சென்னை; தமிழகத்தில் அதிமுக திமுகவிற்கு மாற்றாக ரஜினிகாந்த் இருப்பார் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து கடந்த வாரம் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பின்போது தெரிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பும் ஆதரவும் தமிழகத்தில் எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழருவி மணியன் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் ரஜினிகாந்த் ஒரு மாற்று அரசியலைத் தருவார் என்று அவர் கூறியுள்ளார்.

ரஜினிதான் மாற்று..
இது தொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், தமிழகத்தில் அதிமுக, திமுகவிற்கு மாற்றாக ரஜினிகாந்த் இருப்பார் என்று தெரிவித்தார். காந்திய மக்கள் இயக்கம் எதிர்பார்க்கும் ஊழலற்ற அரசியலை செயல்படுத்தும் மனிதராக ரஜினிகாந்த் இருப்பார்.

ரஜினியின் காந்திய அணுகுமுறை
ரஜினியின் அணுகுமுறையை பார்க்கும் போது அவருக்கும், காந்திய மக்கள் இயக்கத்தின் கொள்கையுடன் நல்ல தொடர்பு இருப்பதாக தெரிகிறது. அரசியலுக்கு வரும் ரஜினிகாந்தின் முடிவு வரவேற்கத்தக்கது.

நிச்சயம் வருவார்
ரஜினிகாந்தை பொறுத்தவரை அவர் அரசியல் களத்தில் வந்து நிற்க போவது நிச்சயம். இதை என்னால் வெளிப்படையாக சொல்ல முடியும். ஒரு படம் வெளியாகும் போது அவர் இம்மாதிரியான அறிவிப்பை அறிவிப்பார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இந்த முறை அவர் அரசியலுக்கு வருவார். நேர்மையான ஊழலற்ற தூய்மையான அரசியல் அமைப்பை உருவாக்குவார்.

பாஜக பக்கம்..
ரஜினிகாந்த், சாதிய அமைப்புகளின் பக்கத்திலோ, வகுப்பு வாத சக்திகள் வளரவோ துணை போக வேண்டாம். அனைவருக்குமான அரசியலில் ஈடுபட வேண்டும். தமிழ்நாட்டில் வகுப்புவாதத்தை வளர்த்தெடுக்க முயற்சிக்கும் பாஜகவை விட்டுவிட்டு மக்கள் நம்பிக்கையை பெறும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் வந்தால் மக்கள் அவர் பின்னால் செல்வார்கள் என்று தமிழருவி மணியன் கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications