ரஜினி சூப்பர் ஸ்டார் அல்ல மக்களின் தலைவர்.. எம்ஜிஆர் சிலை திறப்பில் சினிமா துறையினர் பாராட்டு
சென்னை ஏசிஎஸ் கல்லூரியில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் குறித்து சினிமாத்துறையினர் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: சென்னை ஏசிஎஸ் கல்லூரியில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் குறித்து சினிமாத்துறையினர் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள்.
வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் வெண்கல சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நடிகர்கள் பிரபு, விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். கலைப்புலி தாணு, கே.எஸ்.ரவிகுமார், விக்ரமன் ஆகியோர் ரஜினி குறித்து பேசினார்கள்.
இனி சூப்பர் ஸ்டார் அல்ல மக்களின் தலைவர் ரஜினிகாந்த். நாட்டையும் ஆள்வார் காட்டையும் ஆள்வார் அவருக்கு போட்டி யாரும் இல்லை என்று கலைப்புலி தாணு பேசினார்.
கமல், ரஜினி இடையேயான போட்டி இன்று அரசியலிலும் இருக்கிறது. அப்படி இருந்தால்தான் மக்களுக்கு நல்லது என்று இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பேசினார்.
எம்ஜிஆரை போல சினிமாவில் சிறந்த கருத்துகளை சொன்னவர் ரஜினிகாந்த் என்று இயக்குநர் விக்ரமன் புகழ்ந்து பேசினார்.












Click it and Unblock the Notifications