ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார்... காவிரி பிரச்சனையை தீர்த்து வைப்பார்.. .நண்பர் ராஜ்பகதூர் அதிரடி!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு 100 சதவீதம் வருவார் என்றும் கட்சியில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இடம் கொடுக்க மாட்டார் என்றும் அவரது நண்பர் ராஜ் பகதூர் தெரிவித்தார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்றும் இன்னும் சில நாள்களில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற கேள்விக்கு வருவார் என்ற 70 சதவீத பதில் கிடைத்துள்ளது. 30 சதவீதம் அவர் வாயால் அறிவித்தாலே மட்டுமே 100 சதவீதம் தெரியவரும்.
கடந்த திங்கள்கிழமை நடிகர் ரஜினி ரசிகர்கள் முன்னிலையில் பேசிய கருத்தால் மிகப் பெரிய எதிர்பார்ப்பும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஒரு சாரார் அவர் வரட்டும் பார்க்கலாம் என்கின்றனர். இன்னும் சிலரோ அவர் வரக் கூடாது என்கின்றனர்.

அரசியலுக்கு வருவார்
இதனிடையே சன் தொலைகாட்சிக்கு அவரது நண்பரான ராஜ்பகதூர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ரஜினி காந்த் அரசியலுக்கு நிச்சயம் வருவார். அவரை வாழ வைத்த தமிழ்நாட்டுக்கு நன்மை செய்வார்.

100 சதவீதம்
அவர் அரசியலுக்கு வருவது 100 சதவீதம் உண்மை. அவ்வாறு வரும் பட்சத்தில் கட்சியில் குடும்ப உறுப்பினர்களை சேர்க்க மாட்டார். இந்த மாத தொடக்கத்தில் அவரது குடும்ப உறுப்பினருக்கு நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொள்ள பெங்களூர் வந்தார்.

சமாளிப்பார்
அப்போது அவரிடம் நான் இதுகுறித்து கேட்டேன். மேலும் அரசியல் என்பது சற்று கடினமாச்சே. சமாளிப்பீர்களா என்றேன். அதற்கு அவர் இத்தனை நாள்களாக அரசியலில் நிலைப்பது குறித்து இந்த 25 ஆண்டுகளில் நான் ஸ்டெடி செய்து கொண்டதாக தெரிவித்தார். இதனால் அவர் அரசியலுக்கு வருவார். வந்து மக்களுக்கு நல்லது செய்வார்.

தனிக்கட்சிதாங்க
அதிலும் தனிக்கட்சிதான் ஆரம்பிப்பார். காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண்பார். முதல்வரானால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். அதே எம்எல்ஏ, அமைச்சரானால் குறிப்பிட்ட விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். எனவே யாருடனும் கூட்டணிக்கு செல்லமாட்டார் என கூறியுள்ளார்.

பிறந்த நாள் பரிசு?
இதனால் அரசியலுக்கு வருவதை இன்னும் சில நாள்களில் அறிவித்துவிட்டு அவரது கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அவரது பிறந்த நாளன்று வெளியிடலாம் என்று தெரிகிறது. இது ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக இருக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications