தொடங்கியது அரசியல் தலைவர்களுடன் ரஜினியின் சந்திப்பு... இன்று தமிழருவி மணியனுடன் ஆலோசனை!
சென்னை: விரைவில் அரசியல் கட்சியை அறிவிக்கவிருக்கும் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார் தமிழருவி மணியன்.
இந்தச் சந்திப்பின்போது, ரஜினியின் அரசியல் வருகை, புதிய கட்சி குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ரஜினியின் அரசியல் பிரவேசம், புதிய கட்சி குறித்துதான் கடந்த 15 நாட்களாக இந்தியாவெங்கும் பேச்சாக உள்ளது. குறிப்பாக அரசியல் களத்தில் வாதப் பிரதிவாதங்கள் அனல் பறந்து கொண்டுள்ளன.
இந்த நிலையில், ரஜினி முக்கிய செய்திச் சேனல்களின் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் சந்தித்துப் பேசினர். அடுத்ததாக அரசியல் தலைவர்களும் ரகசியமாகவும் வெளிப்படையாகவும் சந்தித்து வருகின்றனர்.

இன்று நடிகர் ஆனந்த ராஜ் ரஜினியை அவர் வீட்டில் சந்தித்துவிட்டுச் சென்றார். இவர் அதிமுகவில் முக்கியப் பிரமுகர், பேச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் பிரமுகரும், காந்திய மக்கள் கட்சி தலைவருமான தமிழருவி மணியன் இன்று ரஜினியைச் சந்தித்தார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம், கட்சி குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பின்போது நடிகர் ஜீவாவும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications