கணவருடன் கருத்து வேறுபாடு... மவுனம் கலைத்தார் செளந்தர்யா ரஜினிகாந்த்!
சென்னை: தான் விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான செய்தி உண்மைதான் என செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு தொழிலதிபரான அஸ்வின் ராம்குமாரை நடிகர் ரஜினிகாந்தின் மகளான செளந்தர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். திருமணமாகி 6 ஆண்டுகளான நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.

மேலும் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் கடந்த சில தினங்களாக செய்தி வெளியாகின. அதனை தற்போது செளந்தர்யா ரஜினிகாந்த் உறுதி செய்துள்ளார்.
News about my marriage is true. We have been separated for over a year & divorce talks are on. I request all to respect my family's privacy.
— soundarya rajnikanth (@soundaryaarajni) September 16, 2016
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள செளந்தர்யா ரஜினிகாந்த், தனது திருமண வாழ்வு குறித்து வெளியான செய்தி உண்மைதான் என்று கூறியுள்ளார். தாங்கள் இருவரும் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது சொந்த வாழ்க்கை குறித்த விவாதங்களை தவிர்க்குமாறும் செளந்தர்யா ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications