இனி இதுதானா? கருப்பில் இருந்து காவிக்கு மாறிய ரஜினி.. வைரல் புகைப்படம்!
நடிகர் ரஜினிகாந்த் காவி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் காவி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது.
இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ''பேட்ட'' படத்தில் நடிக்க ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இதற்காக ரஜினி டார்ஜிலிங், மும்பை, சென்னை ஆகிய இடங்களில் சூட்டிங்கில் கலந்து கொண்டார். விஜய்சேதுபதி, நவாஸுதீன் சித்திகி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, சனத் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகிய முக்கியமான நபர்கள் நடிக்கிறார்கள்.

காலா கருப்பு அரசியல்
கபாலி, காலா என இரண்டு படங்களிலும் இயக்குனர் ரஞ்சித் மூலமாக ரஜினி இடதுசாரி அரசியல் பேசி இருந்தார். கருப்பு உடை, அம்பேத்கார், பெரியார் என்று இடதுசாரிகள் அரசியல் நேரடியாகவும், பல்வேறு குறியீடுகள் மூலமும் பேசப்பட்டு இருந்தது. இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பாஜக தரப்பில் வந்த எதிர்ப்பு
இந்த நிலையில் இரண்டு படத்தையும் பார்த்த பாஜகவினர் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தனர். முக்கியமாக காலா படத்தை பார்த்துவிட்டு, நேரடியாக ரஜினி இதுபோன்ற படங்களில் நடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கூட பாஜகவினர் கோரிக்கை வைத்து இருந்தனர். அந்த படம் நேரடியாக பாஜக அரசியலை விமர்சித்து இருந்தது.

காவி புகைப்படம்
இந்த நிலையில்தான் காலா படத்தில் முழுக்க முழுக்க கருப்பு உடையில் வந்த ரஜினி தற்போது பேட்ட படத்தில் காவி உடையில் தோற்றம் அளிக்கிறார். ரஜினி காவி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இது பேட்ட பட சூட்டிங் போட்டோவாகும்.

வைரல்
இந்த பட இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. அதன்படி ரஜினி கருப்பில் இருந்து காவிக்கு மாறிவிட்டார் என்று சிலர் கூறுகிறார்கள். சிலர் பாஜகவின் அழுத்தத்தின் காரணமாக இப்படி காவி உடை அணிந்து இருக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications