பிரதமருக்கு ரஜினி அனுப்பிய கடிதமும் பூங்கொத்தும்!
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று, நடிகர் ரஜினிகாந்த் பூங்கொத்தும் கடிதமும் கொடுத்தனுப்பினார். ஆனால் சற்று தாமதமாக வந்ததால் அவை பிரதமரிடம் சேரவில்லை.
ஒருநாள் பயணமாக நேற்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் டெல்லி திரும்ப சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு மாலை 3 மணி அளவில் வந்தார்.

அப்போது, நடிகர் ரஜினிகாந்த் சார்பில் பூங்கொத்தும், கடிதம் ஒன்றும் விமான நிலையத்துக்கு வந்தது. மோடி விமான நிலையத்துக்குள் சென்ற பிறகு, தாமதமாக அவை கொண்டுவரப்பட்டதால் மோடியிடம் சேர்க்க முடியாமல் போய்விட்டது.
இத்தகவலை பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், "பிரதமர் மோடியை வரவேற்று நடிகர் ரஜினிகாந்த் அனுப்பிவைத்த பூங்கொத்து கடைசி நேரத்தில் கொண்டுவரப்பட்டதால் மோடியிடம் சேர்க்க முடியவில்லை. இருப்பினும் இது குறித்த தகவலை மோடியிடம் தெரிவித்தோம். அதைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் அனுப்பி வைத்த கடிதத்தை மின்னஞ்சல் மூலம் மோடிக்கு அனுப்பிவைத்தோம்.
அதில், "நான் வெளியூரில் இருப்பதால் உங்களைச் சந்திக்க முடியவில்லை. உங்களைச் சந்திக்க ஆர்வமாக உள்ளேன்,' என்று ரஜினி எழுதியிருந்தார்.
இதைப் படித்த பிரதமர் நரேந்திர மோடி, 'நானும் உங்களைச் சந்திக்க விருப்பமாக உள்ளேன். எப்போது டெல்லி வந்தாலும் சந்திக்கலாம்,' என்று ரஜினிக்கு மோடி பதில் தெரிவித்தார் என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.
கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது தேர்தல் பிரசாரத்துக்கு சென்னை வந்த நரேந்திர மோடி போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications