காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் தமிழர் கோபத்துக்கு மத்திய அரசு ஆளாக நேரிடும்: ரஜினிகாந்த்
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைப்பது என பிரதமருக்கு ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்பதே பிரதமருக்கு நான் வைக்கும் கோரிக்கை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் பிரச்சினை தமிழகத்தில் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே உள்ளது. இந்நிலையில் நடிகர் சங்கம் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழியில் மவுன விரதம் இருந்து வருகின்றனர்.
இந்த போராட்ட களத்துக்கு ரஜினி கலந்து கொள்வதற்கு முன்னர் சென்னையில் போயஸ் தோட்டத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது பிரதமருக்கு நான் வைக்கும் கோரிக்கையாகும்.

மத்திய அரசு தாமதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தூர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு தாமதப்படுத்துகிறது.

காவிரி வாழ்வாதாரம்
மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழர்களின் கோபத்துக்கும், அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாக நேரிடும். கால் ஏக்கர், அரை ஏக்கர் விவசாயிகளின் வாழ்வாதாரமே காவிரி நீராகும்.

பஞ்சபூதங்கள்
பல கோடி வருமானம் கிடைத்தாலும் பாதிப்பு ஏற்பட்டால் ஸ்டெர்லைட் வேண்டாம். இயற்கையான மண், காற்று, நீரை மாசுப்படுத்த விடக் கூடாது. பஞ்சபூதங்களை மாசுப்படுத்தினால் அது உலகத்தையே அழித்துவிடும். என்னதான் ஸ்டெர்லைட் நிர்வாகம் விளக்கம் கொடுத்தாலும் அதை ஏற்க முடியாது.

கருப்பு பேட்ஜ்
ஐபிஎல் போட்டிகளை நிறுத்தினால் நல்லதுதான். மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்த சென்னை வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணியலாம். கர்நாடகத்தில் எனது படத்தை வெளியிடாமல் தடுத்தால் தயாரிப்பாளர்களும் மாநில அரசும் பார்த்து கொள்ளும். நியாயமான கோரிக்கைக்காக நாம் போராடுகிறோம்.

அண்ணா பல்கலை துணைவேந்தர்
யாரும் எந்த மாநிலத்திலும் பணி செய்யலாம். அதுதான் இந்தியாவின் சிறப்பு. எனினும் காவிரிக்காக போராடி வரும் சூழலில் கர்நாடகத்தை சேர்ந்தவரை அண்ணா பல்கலை துணைவேந்தராக நியமித்திருக்க வேண்டாம்.

செயல்பாட்டில் காண்பிக்க வேண்டும்
எனக்கு கமல் எதிரியல்ல. ஏழ்மை, லஞ்சம், வேலையின்மை, ஏழைகள் விடும் கண்ணீர் ஆகியவைதான் எனது எதிரி. எல்லாவற்றையும் பேசிக் கொண்டிருப்பதை விட
செயல்பாட்டில் காண்பிப்பதே சிறந்தது என்றார் ரஜினி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications