தி.மு.க தலைவர் கருணாநிதியுடன்- ரஜினி, வைரமுத்து சந்திப்பு
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 1-ந் தேதி திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் ஒருவாரம் சிகிச்சை அளித்தனர். மருத்துவர்களின் சிகிச்சையைத் தொடர்ந்து து அவரது உடல்நிலை சீரானது. இதையடுத்து கடந்த 7-ம் தேதி இரவு கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து இருவரும் இன்று மாலை கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தனர். அங்கு கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications