அமெரிக்கா பறக்கிறார் ரஜினிகாந்த்? அரசியல் அறிவிப்பை எதிர்பார்த்த ரசிகர்கள் ஷாக்

அரசியலுக்கு வரப்போகிறேன் என்று அறிவித்த ரஜினிகாந்த் அடுத்த மாதம் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மீண்டும் அமெரிக்காவுக்கு ஆன்மீகப் பயணம் செய்கிறார் ரஜினிகாந்த்- வீடியோ

    சென்னை: ஆன்மீக அரசியலில் குதிக்க உள்ள நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் இமயமலை பயணம் மேற்கொண்டார். அடுத்த மாதம் அமெரிக்க பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1996 ஆம் ஆண்டு முதலே வாய்ஸ் கொடுத்து வருகிறார். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று கடந்த 20 ஆண்டு காலமாகவே அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

    ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் ஓய்வு தமிழக அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறும் ரஜினிகாந்த், தான் அரசியலில் ஈடுபடப்போவதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார்.

    இதனையடுத்து தமிழக அரசியல் களம் சூடுபிடித்தது. ஆன்மீக அரசியல் என்று கூறிய ரஜினி, கட்சி, கொள்கை பற்றி கேள்வி கேட்டதற்கு சரியான பதிலை சொல்லவில்லை. தமிழகத்தில் நிலவும் எந்த சம்பவங்களுக்கும் கருத்து கூறவில்லை.

    இதற்கிடையே ட்விட்டரில் கருத்து கூறி வந்த கமல்ஹாசன், திடீரென்று மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை மதுரையில் தொடங்கினார். திருச்சியில் ஒரு பொதுக்கூட்டத்தையும் நடத்தி முடித்து சுற்றுப்பயணமும் செய்து வருகிறார்.

    இணையதளத்தில் மன்றம்

    இணையதளத்தில் மன்றம்

    ரஜினி புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பின் மூலம் உறுப்பினர்களை இணைத்து வருகின்றனர். 1 கோடி என்றளவில் உறுப்பினர்கள் சேர்ந்தபிறகு அதை கட்சியாக மாற்ற ரஜினி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தினம் தினம் போராட்டம்

    தினம் தினம் போராட்டம்

    அரசியல் அறிவிப்புக்கு இடையே இமயமலை பயணம் மேற்கொண்டார். தமிழகத்தில் காவிரி பிரச்சினை, ஸ்டெர்லைட் பிரச்சினை என போராட்ட களமாக மாறியுள்ளது. இந்த நிலையில் தற்போது கட்சி தொடங்கும் முடிவை ஒத்திவைத்துள்ள ரஜினிகாந்த், விரைவில் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அமைதி திரும்ப வேண்டுமோ

    அமைதி திரும்ப வேண்டுமோ

    போர் வரட்டும் போருக்கு செல்வோம் இப்போ என்ன அவசரம் என்று கூறினார் ரஜினி. ஆனால் இப்போதோ, ஆன்மீக பயணமாக இமயமலை, அமெரிக்க பயணம் என ஒவ்வொரு ஊராக பயணம் செய்து வருகிறார். அவரது ரசிகர்களோ மன்றங்களை ஒருங்கிணைத்து வருகின்றனர். நிர்வாகிகள் கூட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.
    அரசியல் பயணத்தை தொடங்கும் முன்பு தனது ஆன்மீக குரு, வழிகாட்டிகளை சந்தித்து ஆசி பெற்று வருகிறார் ரஜினிகாந்த்.

    அமெரிக்க ஆசிரமத்தில் ரஜினி

    அமெரிக்க ஆசிரமத்தில் ரஜினி

    ரஜினிகாந்த், அமெரிக்காவில் உள்ள தனது குரு, சச்சிதானந்தாவின் ஆசிரமத்துக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம். அமெரிக்காவில் படப்பிடிப்புக்கு சென்றாலும் வர்ஜீனியாவில் உள்ள குரு சச்சிதானந்த சுவாமிகளின் தாமரை ஆசிரமத்திற்கு சென்று வழிபட்டு வருவார். இந்த முறை தனது அரசியல் பயணத்திற்கு முன்பு அமெரிக்காவில் உள்ள ஆசிரமத்திற்கு சென்று ஆசி பெற தயாராகி வருகிறார் ரஜினிகாந்த். அமெரிக்கா சென்று வந்த பின்னராவது அரசியல் கட்சியை அறிவிப்பாரா என்பது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+