நீங்கதான் என் கட்சி பொதுச்செயலர்... திமுகவின் ஜெகத்ரட்சகனுக்கு ரஜினி பகிரங்க அழைப்பு

தம்முடைய கட்சியின் பொதுச் செயலராக இருக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரான திமுகவின் ஜெகத்ரட்சகனுக்கு ரஜினிகாந்த் அழைப்பு விடுத்திருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனிக்கட்சி தொடங்கும் ரஜினிகாந்த் தமது கட்சியின் பொதுச் செயலராக முன்னாள் மத்திய அமைச்சரான திமுகவின் ஜெகத்ரட்சகனை நியமிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஜினிகாந்த் பாரதிய ஜனதாவில் சேருவார் என கூறப்பட்ட தகவல்களை அவரது நெருங்கிய வட்டாரங்கள் நிராகரித்து வருகின்றன. தனிக்கட்சி தொடங்குவதில்தான் ரஜினிகாந்த் உறுதியாக இருக்கிறாராம்.

இதற்காக திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மூத்த தலைவர்கள் பலருடனும் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைகளில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார் திமுகவின் ஜெகத்ரட்சகன்.

ராஜ்யசபா எம்பி சீட்

ராஜ்யசபா எம்பி சீட்

ஜெகத்ரட்சகன், கருணாநிதி குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவராக இருந்தவர். கருணாநிதி குடும்பத்தின் நிதி தேவைகளையும் கூட நிறைவேற்றி வந்தவர். அவருக்கு கடந்த முறை ராஜ்யசபா எம்பி பதவி தர கருணாநிதி திட்டமிட்டிருந்தார்.

அதிருப்தியில் ஜெகத்

அதிருப்தியில் ஜெகத்

ஆனால் கடைசிநேரத்தில் ஜெகத்ரட்சகனுக்கு அந்த பதவி கிடைக்காமல் போனது. இதனால் ரொம்பவே நொந்து போன ஜெகத்ரட்சகன், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில்தான் ரஜினிகாந்த், ஜெகத்ரட்சகனை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அப்போது முதல்...

அப்போது முதல்...

1996-ம் ஆண்டு திமுக- தமாகா கூட்டணிக்கு ரஜினி ஆதரவு அளித்ததன் பின்னணியில் ஆர்.எம்.வீரப்பன் பங்கு மிக முக்கியமானது. அப்போது நடைபெற்ற அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் ஜெகத்ரட்சகனும் பங்கேற்றிருந்தார். அப்போது முதல் ரஜினியுடன் மிக நெருக்கமானவராகவே ஜெகத்ரட்சகன் இருந்து வருகிறார்.

பொதுச்செயலர்

பொதுச்செயலர்

தற்போது தனிக்கட்சி தொடங்கும் ரஜினிகாந்த், தமது கட்சியின் பொதுச்செயலராக நீங்களே இருக்க வேண்டும் என ஜெகத்ரட்சகனை கேட்டு வருகிறாராம். திமுகவில் அதிருப்தியுடன் இருக்கும் ஜெகத்ரட்சகனும் ரஜினிகாந்தின் வேண்டுகோளை ஏற்கும் நிலையிதான் இருக்கிறார் என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+