தாதா சாகிப் பால்கே விருது பெறும் கே.விஸ்வநாத்துக்கு ரஜினி வாழ்த்து

தாதா சாகிப் பால்கே விருது பெறும் இயக்குனர் கே.விஸ்வநாத்துக்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாதா சாகிப் பால்கே விருது பெறும் மூத்த நடிகரும், இயக்குனருமான கே.விஸ்வநாத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகில் உயரிய விருதாக கருதப்படுகிறது தாதா சாகிப் பால்கே விருது. 2016 ஆம் ஆண்டுக்கான விருது மூத்த நடிகரும், இயக்குனருமான கே.விஸ்வநாத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

rajini wishes for filmmaker K Vishwanath

தாதா சாகிப் பால்கே விருது பெறும் கே.விஸ்வநாத், தெலுங்கு திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களில் இயக்கியும் நடித்தும் உள்ளார். அத்துடன் தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர். யாரடி நீ மோகினி, உத்தம வில்லன் உட்பட பல தமிழ்ப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் கே.விஸ்வநாத். இந்நிலையில் விருதுக்கு தேர்வாகியுள்ள விஸ்வநாத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இயக்குனர் கே.விஸ்வநாத்தின் சாதனைக்களுக்கு கிடைத்த அங்கீகாரம் தாதா சாகிப் பால்கே விருது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+