செயல் தலைவர் பதவி - ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
திமுகவின் செயல் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினி காந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக செயல் தலைவராக அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழுக்கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை. அக்கட்சியின் பொதுச்செயலர் அன்பழகன் இப்பொதுக்குழு கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.

பின்னர் திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலினை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டதை அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்தநிலையில் திமுக செயல் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலினை தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்ட ரஜினிகாந்த் தனது வாழ்த்தை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications