அட, ரஜினி கட்சி தொடங்க மாட்டாருங்க.. அடித்துச் சொல்கிறாரே தங்கத் தமிழ்ச்செல்வன்!
ரஜினி இப்போதைக்கு கட்சி தொடங்கமாட்டார் என்று டி.டி.வி தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்து உள்ளார்.
மதுரை : ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், நடப்பதை எல்லாம் வைத்துப் பார்த்தால் ரஜினி நிச்சயம் கட்சி ஆரம்பிக்கமாட்டார் என்று டி.டி.வி தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்து உள்ளார்.
டி.டி.வி தினகரன் அணி சார்பில் மதுரையில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் டி.டி.வி தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, இன்றைக்கு தமிழ்நாட்டில் நிர்வாக திறமையற்ற கூட்டம் ஒன்று ஆட்சி நடத்தி வருகிறது. இன்னும் எத்தனை நாள் இந்த ஆட்சி நடக்கும் என்று சொல்ல முடியாது. மக்களே வெகுண்டு எழுந்து அவர்களை விரட்டும் அளவிற்கான விஷயங்களை அவர்கள் செய்து வருகிறார்கள்.

தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை
ஆர்.கே. நகர் தொகுதியில் ஓட்டுக்கு ரூ. 6 ஆயிரம் கொடுத்து டெபாசிட் வாங்கிய எடப்பாடி அணியினர் இன்னும் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. கொஞ்சம் அசந்து விட்டோம் என்கிறார்கள். கழகப் பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் ஆகியோரது காலில் விழுந்து பதவி வாங்கியவர்கள் எல்லாம் இன்றைக்கு நம்மை துரோகி என்கிறார்கள். இதற்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள். தினகரன் ஆட்சி அமையப்போவது உறுதி.

அதிமுகவை விமர்சிக்கும் பாஜக
ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்று விட்டதால் மத்திய பாஜக அரசும், எடப்பாடி அணிக்கு இப்போது ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. அவர்களுக்கும் அது தெரிந்தவிட்டது. இவர்களுக்கு மக்களிடமும் செல்வாக்கு இல்லை என்பதை தெரிந்து கொண்ட பாஜகவினர் இப்போது கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தமிழக அரசை விமர்சிக்க தொடங்கி விட்டனர்.

யார் வேண்டுமானாலும் வரலாம்
ரஜினி, கமல் அரசியலுக்கு வரப்போவதாக தெரிவித்துள்ளனர். இன்றைக்கு தமிழ்நாட்டில் அதைப்பற்றி தான் அனைவரும் விவாதித்து வருகின்றனர். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் வெற்றி பெறுவார்களா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்போது பேஷன் ஆகிவிட்டது.

ரஜினியின் அரசியல் ஆலோசனை
ஆனால் இப்போதைக்கு ரஜினியின் ஆலோசகர் குஜராத் தேர்தல், 2 ஜி அலைக்கற்றை வழக்கு, ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக ரஜினிக்கு வழங்கிய யோசனைகள் எல்லாம் தோல்வியில் முடிந்துள்ளன. இத்னால், கட்சி தொடங்குவது குறித்து ரஜினி யோசித்து வருகிறார். எனவே ரஜினி இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என்று தங்கத் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டு உள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications