For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என் பின்னால் இருப்பது "இவங்கதான்"... அது பாஜக இல்லை... ரஜினி உறுதி

என் பின்னால் இருப்பது பாஜக இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆன்மீக பயணம் சிறப்பாக ஆசியுடன் முடிந்தது - ரஜினிகாந்த்- வீடியோ

    சென்னை: என் பின்னால் இருப்பது பாஜக இல்லை என்றும் என் பின்னால் இருப்பது மக்கள் மற்றும் கடவுள் மட்டுமே என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

    அரசியல் கட்சி தொடங்கவுள்ள ரஜினிகாந்த் ஆன்மிக சுற்றுப்பயணமாக கடந்த 10-ஆம் தேதி இமயமலைக்கு சென்றார். அங்கு ஆன்மிக குருமார்களை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

    மேலும் குரங்கணி தீவிபத்துக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை, காவிரி விவகாரத்தில் கருத்து இல்லை, பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்விக்கு பதில் அளிக்க மறுத்தது என்று ரஜினியை சர்ச்சை சுற்றியிருந்தது.

    பாஜக தலைவர்கள்

    பாஜக தலைவர்கள்

    மேலும் அங்கு அவரிடம் பேட்டி எடுத்த ஆங்கில் நாளிதழிடம் நான் ஆன்மிக பயணமாக இங்கு வந்துள்ளதால் அரசியல் குறித்து பேசமாட்டேன் என்று ரஜினி தெரிவித்திருந்தார். ஆனால் அங்கு சென்று பாஜக தலைவர்களை சந்தித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    காவிரி மேலாண்மை

    காவிரி மேலாண்மை

    ஆன்மிக பயணம் முடித்து விட்டு இமயமலையிலிருந்து இன்று சென்னை திரும்பினார் ரஜினி. அப்போது அவர் போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதை எவ்வளவு சீக்கரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அமைக்க வேண்டும்.

    வேலைநிறுத்தம் செய்யக் கூடாது

    வேலைநிறுத்தம் செய்யக் கூடாது

    தமிழக அரசும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஏப்ரல் 14-ஆம் தேதி கட்சி கொடி, கட்சி பெயர் அறிவிப்பு இல்லை என்றார் ரஜினி. சினிமா துறையில் மட்டுமல்லாமல் எந்த ஒரு பிரச்சினைக்கும் வேலைநிறுத்தம் என்பது தீர்வாகாது என்பதை நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன்.

    பாஜக இல்லை

    பாஜக இல்லை

    பின்னர் ஆன்மிக பயணத்தின்போது அரசியல் பேச வேண்டாம் என்று கூறிவிட்டு பாஜக தலைவர்களை சந்தித்தது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் என் பின்னால் பாஜக இருப்பதாக கூறுகின்றனர். அது தவறு.

    நழுவுகிறார்

    நழுவுகிறார்

    என் பின்னால் கடவுளும், மக்களும்தான் உள்ளனர் என்றார். ரஜினி எல்லா விவகாரத்திலும் நழுவுகிறார் என்று கமல் கூறியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அதற்கு நான் பதில் கூற விரும்பவில்லை என்றார் ரஜினி.

    கடும் விமர்சனம்

    கடும் விமர்சனம்

    காவிரி, பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகள் ரஜினி நழுவியது குறித்து கமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு அவர் ரஜினி இதில் மட்டுமா நழுவுகிறார், அனைத்து விவகாரங்களிலும்தான் நழுவுகிறார் என்று விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    No BJP behind me, says Rajinikanth. He also says that TN government should give pressure to Central Government in the Cauvery issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X