மருத்துவ பரிசோதனைக்காக ரஜினி ஜூலையில் அமெரிக்கா பயணம்!
மருத்துவ பரிசோதனைக்காக ரஜினிகாந்த் ஜூலையில் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.
சென்னை: மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் 20-ந் தேதி அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி தீவிர அரசியலில் இறங்க திட்டமிட்டுள்ளார். இதற்கான ஆலோசனைகளில் ரஜினிகாந்த் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

இன்று மும்பை பயணம்
அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் என பலரையும் ரஜினிகாந்த் சந்தித்து வருகிறார். இதனிடையே இன்று மும்பை சென்று காலா படப் பிடிப்பில் பங்கேற்கிறார் ரஜினி.

அடுத்த மாதம் அமெரிக்கா
இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டு ஜூலை 20-ந் தேதி சென்னை திரும்புகிறார் ரஜினி.

ஆகஸ்ட்டில் சென்னை சூட்டிங்
சென்னை திரும்பியதும் அரசியல் கட்சி தொடர்பான ஆலோசனைகளை நடத்துகிறார். ஆகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் சென்னையில் நடைபெறும் காலா படப்பிடிப்பில் அவர் பங்கேற்கிறார்.

தீம் பார்க் செட்
சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் தனியார் தீம் பார்க்கில் காலா படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மும்பை தாராவி போல் இந்த செட் உருவாக்கப்பட்டு வருகிறது.
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications