வாட்ஸ் அப் எமோஜி ஐகானில் ரஜினிகாந்தின் கபாலி ஐகானா ?
சென்னை: வாட்ஸ் அப்பில் புட்பால் ஐகான் (Activity)-க்கு கீழே இடம்பெற்றுள்ள 2வது வரிசையில் 12வது இடத்தில் ஒரு எமோஜி வலம் வந்துகொண்டுள்ளது. அந்த எமோஜி ரஜினி கபாலியை குறிப்பதாக பரப்பப்பட்டு வருகிறது.
ரஜினியின் கபாலி படத்திற்கு என்னென்னமோ வரவேற்பு கிடைத்து வருகிறது. ரஜினி ரசிகரகள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கபாலி படம் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. இதுவரை தமிழ்ப் படங்கள் பற்றிக் கேள்விப்படாத நாடுகள் கூட கபாலியை வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகின்றன.

ஹாலிவுட் திரை வல்லுநர்கள் பலரும் கபாலி குறித்துப் பேசுவதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இப்போது அமெரிக்காவில் இருக்கும் ரஜினியைச் சந்திக்க முன்னணி திரைப்பட நிறுவனங்கள் இரண்டு முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் ஜாக்கி சானுடன் அவரை இணைத்து ஒரு படம் உருவாக்கும் முயற்சியும் நடக்கிறது.
பிரபல சர்வதேச விமான நிறுவனம் கபாலி படத்தின் புரமோஷனில் இதுவரை இல்லாத பிரமாண்டம் காட்ட ஆரம்பித்துள்ளது. கபாலி படத்துக்காக ஏராளமான விமானப் பயணத் திட்டங்கள், பேக்கேஜ்களை அறிவித்துள்ள அந்த நிறுவனம், இப்போது கபாலி விமானங்களை இயக்கி வருகிறது.

இதுவரை உலகில் எந்த ஒரு நடிகர் அல்லது படத்துக்காகவும் இப்படி விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டதில்லை. அந்தப் பெருமை முதல் முறையாக ஒரு தமிழ் நடிகருக்கும் தமிழ்ப் படத்துக்கும் கிடைத்திருக்கிறது. ரஜினிகாந்த், கபாலி என்ற பெயருடன் உலகை வலம் வருகின்றன ஏர் ஏசியா விமானங்கள்
இந்நிலையில் வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் இடம் பெற்றிருக்கும் ஒரு 'எமோஜி' ரஜினிகாந்தின் கபாலியை குறிப்பதாக வதந்தி பரவ, ரசிகர்கள் உற்சாகமடைந்து அதனை பரப்ப துவங்கிவிட்டார்கள். ஸ்டைலுடன் பாட்ஷா படத்தில் ரஜினியின் தோற்றத்தை அந்த எமோஜி கொண்டிருக்கிறது.
இப்போது இந்த எமோஜி லேட்டஸ்ட் ட்ரெண்ட்டாகியுள்ளது. ஆனால் உண்மையில் அது 'வால்ட் ஜாப்ஸ்கோ(Walt Jabsco)' என்னும் கதாப்பாத்திரத்தை குறிக்கும் 'எமோஜி'. அதற்கு வாட்ஸ் அப் தரப்பு "The man with suit levitating" என விளக்கம் அளிக்கிறது. இருப்பினும் ரஜினியின் ரசிகர்கள் தற்போது 'அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பது போல அனைத்தையும் நம்ப துவங்கிவிட்டார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications