ஜனவரி 4-ல் புதுக் கட்சி.. ரஜினியின் அதிரடி பிளான் ரெடி?
ரஜினிகாந்த் வரும் ஜனவரி 4-ஆம் தேதி புதுக் கட்சியை தொடங்குகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: ரஜினிகாந்த் வரும் ஜனவரி 4-ஆம் தேதி புதுக்கட்சியை தொடங்குவார் என்ற தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக அவர் வரும் டிசம்பர் 26-ஆம் தேதி செய்தியாளர்களையும் சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
ரஜினிகாந்த்தை அரசியலுக்கு வருமாறு பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் அழைக்கின்றனர். இந்நிலையில் கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறி தனது அரசியல் பிரவேசத்துக்கு அடிதளம் போட்டார்.
இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். அவர் அதிகாரப்பூர்வமாக எப்போது அறிவிப்பார் என்று காத்திருந்தனர்.

அரசியல் ஒத்து வராது
இதனிடையே பல்வேறு கட்சியினர் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். அவருக்கு அரசியல் சரிப்பட்டு வராது. இது வழக்கமான அவர் நடிகத்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன் அடிக்கப்படும் ஸ்டென்ட் என்றே விமர்சித்தனர். மேலும் அவர் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி அவரது பிறந்தநாளின் போது அறிவிப்பார் என்று எதிர்பார்த்து அவர் அன்றைய தினம் ஏதும் அறிவிக்காதது அரசியல் ஸ்டென்ட் என்பதை உறுதிப்படுத்துவதாகவே தெரிவித்தனர்.

6 நாட்கள் சந்திப்பு
இதனிடையே ரஜினிகாந்த் வரும் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் குதித்தனர். மேலும் இந்த நாட்களில் தலைவர் ஏதேனும் அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்பினர். இதனிடையே கட்சிக் கொடி, சின்னம், பெயர், நிர்வாகிகள் குறித்த பட்டியல் என அனைத்தும் தயாராகிவிட்டதாகவே கூறப்படுகிறது.

அரசியல் பிரவேசம் எப்போது
காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக உள்ள தமிழருவி மணியன் தனியார் தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளிக்கையில், ரசிகர்களுடனான சந்திப்பின்போது தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை ரஜினி நிச்சயம் அறிவிப்பார் என்று கூறியிருந்தார். இதனால் எதிர்பார்ப்புகள் கூடின.

வரும் ஜன 4-ல் கட்சி?
இந்நிலையில் வரும் 26-ஆம் தேதி செய்தியாளர்களை ரஜினி சந்திக்கவுள்ளதாகவும் அன்றைய தினம் தனது அரசியல் பிரவேசம் எப்போது என்பதை நிச்சயம் அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனேகமாக வரும் ஜனவரி 4-இல் புதுக் கட்சியை ரஜினி தொடங்கிவிடுவார் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications