ரஜினிகாந்த் பாஜகவுக்கு மட்டும் அல்ல காங்கிரஸுக்கும் நண்பர் தான்: ஞானதேசிகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் காங்கிரஸ் கட்சிக்கும் நண்பர் தான் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர் என்று கூறி அவரை தங்கள் கட்சியில் சேர்க்க பாஜக முயற்சி செய்து வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

Rajinikanth is a friend of congress also: Gnanadesikan

தமிழகத்தில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்று பாஜக கனவு காண்கிறது. அது ஒருபோதும் நடக்காது. பின்கதவு வழியாக உள்ளே நுழையவே தங்கள் கட்சியில் ரஜினிகாந்தை சேர்க்க பாஜக முயற்சி செய்கிறது. ரஜினிகாந்த் எங்களுக்கும் நண்பர் தான்.

தீர்ப்பை தீர்ப்பாக பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்காததால் தான் ஆளுங்கட்சியினர் தீர்ப்பையும், நீதிபதியையும் விமர்சித்து மாநாகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்தன. அதற்காக தமிழக அரசின் நிர்வாகத்தை மத்திய அரசின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதை நாங்கள் ஏற்க மாட்டோம்.

தமிழக சட்டசபை தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம். தமிழக காங்கிரஸ் கட்சி மத்திய காங்கிரஸ் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அதனால் அனைத்து முடிவுகளையும் மத்திய தலைமை தான் எடுக்கும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+