காலா ஷூட்டிங்கும் முடியப் போகுது.. அடுத்த மாசமாச்சும் அரசியலுக்கு வந்துருவாரா ரஜினி?
காலா படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதால் அடுத்த மாதத்தில் ரசிகர்களை சந்தித்து அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : காலா படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் இருப்பதால் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த மாதத்தில் ரசிகர்களை சந்தித்து அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் அறிவிக்க உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கபாலி பட இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் மும்பை தாதாவாக நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிய இருப்பதாக தெரிகிறது. மும்பையின் தாராவி பகுதியில் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு தொடங்கியது முதல் மின்னல் வேகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சுமார் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தெரிகிறது. எஞ்சிய பகுதிகளை படமாக்க பூந்தமல்லி பகுதியில் தாராவி போன்ற செட் அமைக்கப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு எஞ்சிய காட்சிப் படப்பிடிப்பிற்காக படக்குழு மீண்டும் மும்பை செல்ல உள்ளது.

அக்டோபர் மாதத்தில் சந்திப்பு
இந்நிலையில் காலா படப்பிடிப்பால் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்கும் படலம் தடை பட்டு போயுள்ளது. விடுபட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள் எப்போது ரஜினிகாந்த்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளப் போகிறோம், நேரில் பார்க்கப் போகிறோம் என்று காத்திருக்கின்றனர். காலா படப்பிடிப்பு முடிந்தவுடன் அக்டோபர் மாதத்தில் 6 நாட்கள் தொடர்ச்சியாக ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அடையாள அட்டை தயார்
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்திலே இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ள ரசிகர்களுக்கான அடையாள அட்டைகள் தாயராகி வருகின்றன.

அரசியல் அறிவிப்பு
ரசிகர்களுடனான இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரேவசம் குறித்த தெளிவான நிலைப்பாட்டை அறிவிப்பார் என்று தெரிகிறது. கடந்த முறை ரசிகர்களுடனான சந்திப்பின் போது போருக்கு தயாராகுங்கள் நேரம் வரும் போது அரசியல் பற்றி அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.

ஆதரவு
அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ள மாட்டேன் என்றார். ரஜினியின் அரசியல் முடிவு குறித்து அவரது குடும்பத்தினரும் ஆதரவான கருத்தையே தெரிவித்து வருகின்றனர்.

யார் முதலில்?
நான் என்றோ அரசியலுக்கு வந்து விட்டேன் என்று கூறி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் நடிகர் கமல்ஹாசன், விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது. இந்நிலையில் ரஜினியும் தனது அரசியல் பிரவேசம் குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங்












Click it and Unblock the Notifications