மக்களிடம் கண்ணாமூச்சி ஆடும் ரஜினி, கமல்? ஒருவர் திட்டம் இன்னொருவருக்கு தெரிகிறதே!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அரசியலுக்கு வரும் கமலுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும், பரஸ்பரம் அரசியல் என்ட்ரிக்கான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

    இரு முன்னணி நடிகர்களுமே ரொம்ப காலமாக அரசியல் திட்டத்தை மனதில் வைத்திருந்ததும், அவர்கள் இருவருக்குமே பரஸ்பரம் இது தெரியும் என்பதும் சில சம்பவங்கள் மூலம் ரசிகர்களின் நினைவுக்கு இப்போது வருகிறது.

    அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தனிக்கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதற்கு நடிகர் கமல் வாழ்த்து தெரிவித்திருந்தார். கடந்த டிசம்பர் 31ம் தேதி ரஜினிகாந்த் இந்த அறிவிப்பை தனது ரசிகர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.

    கமல் வாழ்த்து

    இதையடுத்து கமல் டிவிட்டரில் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். "சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக" என கமல் கூறியிருந்தார்.

    ரஜினி, கமல் வாழ்த்து

    ரஜினி, கமல் வாழ்த்து

    இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன்மூலம், இருவருமே பரஸ்பரம் வாழ்த்திக்கொண்டு மரியாதை வெளிப்படுத்தியுள்ளனர். இருவருக்கும் நடுவேயான புரிதலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது இந்த பரஸ்பர வாழ்த்துக்கள்.

    அப்போதே சொன்ன கமல்

    அப்போதே சொன்ன கமல்

    கமல்ஹாசன் தான், கட்சி ஆரம்பிக்க போவதாக கடந்த ஆண்டின் இறுதியில் அறிவித்தார். அப்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் அறிவிப்பை வெளியிடுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், அதை பூடகமாக கமல் அப்போதே வெளிப்படுத்திவிட்டார். ரஜினியும், நானும் ஆரோக்கிய அரசியல் செய்வோம். ஒருவரை ஒருவர் தரம்தாழ்ந்து் விமர்சனம் செய்ய மாட்டோம். ஆரோக்கிய அரசியலை தமிழகத்தில் வளர்ப்போம் என அறிவித்தார் கமல்.

    திட்டமிட்டனர்?

    திட்டமிட்டனர்?

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வர உள்ள திட்டம் கமலுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததால்தான் இந்த வார்த்தைகளை அவர் தெளிவாக கூற முடிந்தது. இருவருமே நெடு நாட்களாக இத்திட்டத்தோடு இருந்துள்ளனர் என்பது இதன் மூலம் தெரிகிறது. தனது அரசியல் அறிவிப்புக்கு முன்பாக, ரஜினிகாந்த் ஒரு விழாவில் பேசியபோது, அரசியலில் வெற்றி பெறும் தந்திரம் என்ன என்று கமலிடம் கேட்டால் இப்போது எனக்கு சொல்லி தரமாட்டார் என சிரித்தபடியே கூறினார். அரசியலில் இருவரும் போட்டியாளர்களாக மாறப்போவதாக அப்போது ரஜினியும் ஒரு க்ளூ கொடுத்தார்.

    சொன்னபடியே நடக்குதே

    சொன்னபடியே நடக்குதே

    இவ்விருவருமே பூடகமாக ரசிகர்களுக்கு தாங்கள் அரசியலுக்கு வர உள்ளதை தெரிவித்தபடியே இருந்தனர். இவர்கள் இருவருமே இப்போது ஏற்கனவே கூறியபடி ஆரோக்கிய அரசியலமை முன்னெடுக்கும் வகையில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+