வளைத்து போட பாஜக பகீரத முயற்சி... மோடியை சந்திக்க டெல்லி செல்கிறார் ரஜினிகாந்த்!
அரசியலில் நுழைய திட்டமிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் விரைவில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மீது தமிழக பாஜக தலைவர்கள் பாய்ந்து பிராண்டி கொண்டிருந்தாலும் டெல்லி மேலிடமோ அவரை வளைத்துப் போடுவதில் படுதீவிரமாக இருக்கிறது. பிரதமர் மோடியை விரைவில் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பேசுவார் என்கின்றன டெல்லி தகவல்கள்.
இதோ..அதோ என ஒருவழியாக அரசியலில் நுழையப் போவதை கால் நூற்றாண்டுக்குப் பின்னர் அறிவித்து வருகிறார் ரஜினிகாந்த். அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார்; முதலமைச்சர் கனவுடன் இருக்கிறார் என நண்பர் ராஜ்பகதூரும் தெரிவித்திருக்கிறார்.

தனிக்கட்சி
ரஜினிகாந்த் வந்தால்தான் தமிழகத்தைக் காப்பாற்ற முடியும்; தமிழகத்தில் நிலவும் ஊழலை ஒழிக்க முடியும் என்று கர்நாடகாவில் இருந்து அவரது நண்பர் ராஜ்பகதூர் பேட்டியளித்திருக்கிறார். ரஜினி தனிக்கட்சி தொடங்குவார் எனவும் கூறப்பட்டு வருகிறது.

ரஜினிக்கு அழைப்பு
இந்நிலையில் ரஜினிகாந்துக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என பாஜக தலைவர் அமித்ஷா வெளிப்படையாக அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் தமிழக பாஜக தலைவர்களோ ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ரஜினியுடன் பேச்சு
இதனிடையே டெல்லி மேலிடத்தில் இருந்து பாஜக மூத்த தலைவர்கள் சிலர் ரஜினிகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது பிரதமர் மோடியை நேரில் சந்திக்க வருமாறும் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம்.

டெல்லியில் மோடியுடன் சந்திப்பு
இதனை ஏற்று விரைவில் ரஜினிகாந்த் டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. மோடியுடனான சந்திப்பில் தமது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த் விளக்கம் அளிப்பார் என தெரிகிறது.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications