மீண்டும் மீண்டும் கைவிடப்படும் ரசிகர்களுடனான ரஜினி சந்திப்பு... 'ஸ்ட்ரெயிட்டாக' அரசியல் மாநாடுதானாம்
ரசிகர்களுடனான சந்திப்பை கைவிட்டுவிட்டு ஜனவரியில் அரசியல் மாநாடு நடத்தி அப்போது தனது கட்சி குறித்து அறிவிக்கும் முயற்சியில் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
Recommended Video

சென்னை: ரசிகர்களை அக்டோபரில் சந்திக்க திட்டமிட்டிருந்த ரஜினிகாந்த் அதை கைவிட்டுவிட்டு நேரடியாக ஜனவரியில் அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த், கமல் அரசியல் பிரவேசம்தான் தான் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. முதலில் யார் அரசியலுக்கு வருவார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் அரசியலுக்கு வருவது தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது. ரஜினிகாந்த் கட்சியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருவதாகவே நீண்டகாலமாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் விரைவில் கட்சியை தொடங்கிவிடுவார் என்றே தெரிகிறது.
ரஜினியும் கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவதற்கு முன்பே நிழல் யுத்தத்தை தொடங்கிவிட்டனர். முரசொலி பவளவிழாவில் தற்காப்பை விட தன்மானமே முக்கியம் என கமல்ஹாசன் பேசியது கூட ரஜினியை குறிப்பிட்டே என்கிற விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

பாஜகவுக்கு பொருத்தமானவர்
இதேபோல் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், தான் பகுத்தவறிவாளன்; ஆன்மீக சிந்தனையுடைய ரஜினிகாந்த் பாஜக கூட்டணிக்குப் பொருத்தமானவர் என்று கருத்துதெரிவித்தார். ஆனால் வேறு ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த கமல், நிர்வாக ரீதியாக தமிழகத்துக்கு தேவைப்பட்டால் தான் பாஜகவுடன் கூட்டணி வைக்கவும் தயங்கமாட்டேன் என்று திடீர் பல்டி அடித்தார்.

ரஜினி மீது விமர்சனம்
அதுமட்டுமல்லாது கடந்த ஆகஸ்ட் மாதம் கமல் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தன்னை பின்னுக்கு தள்ளிவிட்டு முந்தி சென்றுவிடாதே என்றும் கூட நட என்றும் பதிவிட்டிருந்தார். இதுவும்கூட ரஜினியை விமர்சிப்பதாகவே கூறப்பட்டது.

கமலுடன் மல்லுக்கட்டு
இந்நிலையில் சிவாஜி கணேசன் மணி மண்டப திறப்பு விழாவில் ரஜினி தம் பங்குக்கு வாயை திறந்தார். அரசியலுக்கு பணம், சினிமா புகழ், பெயர் ஆகியவற்றை தாண்டி ஒன்று உள்ளது. அது என்னவென்று சத்தியமாக எனக்கு தெரியாது. ஆனால் கமல்ஹாசனுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். தெரிந்து இருந்தாலும் அதை எனக்கு சொல்ல மாட்டார். ஒரு வேளை இரண்டு மாதத்துக்கு முன்பு கேட்டு இருந்தால் சொல்லியிருப்பாரோ என்னவோ. நீங்க திரையுலக மூத்த அண்ணன். நீங்க என்கிட்ட சொல்லணும். சொல்லுங்க. நான் உங்க தம்பி என்று கேட்டால், 'நீ என் கூட வா சொல்றேன்!'னு சொல்றார்!'' என்று மறைமுகமாக கமலை குட்டினார் ரஜினிகாந்த்.

ஜனவரியில் அரசியல் மாநாடு
இதனிடையே இதோ சந்திக்கிறார்... அதோ சந்திக்கிறார் என காத்திருந்த ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தொடர் ஏமாற்றமே. இந்த அக்டோபர் மாதம் நடக்கப் போவதாக கூறப்பட்ட ரசிகர்கள் சந்திப்பும் கூட நடக்கவில்லையாம். ஆகையால் ரசிகர்களை சமாதானப்படுத்தும் வகையில் ஜனவரியில் ஸ்ட்ரெயிட்டாக மாநாடு நடத்துகிறார் தலைவர் என கூறி வருகின்றன ரஜினிவட்டாரங்கள்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications