லட்சக்கணக்கான திரையுலகினரின் வாழ்க்கையைக் காப்பாற்றுங்கள்! - ரஜினி
சென்னை: திரையுலகை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைக் காக்க, கேளிக்கை வரியை ரத்து செய்யுங்கள் என்று ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
திரையரங்குகளுக்கு 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் உள்ள திரையங்கு உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்ச சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி நடிகர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
Keeping in mind the livelihood of Lakhs of people in the tamil film industry, I sincerely request the TN GOVT to seriously consider our plea
— Rajinikanth (@superstarrajini) July 4, 2017
திரையுலகினரின் இந்தப் போராட்டத்துக்கு ரஜினியும் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார். அவர் இன்று அதிகாலை ட்விட்டரில், "தமிழ் சினிமா துறையை நம்பியுள்ள லட்சகணக்கவர்களின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு எங்கள் வேண்டுகோளை பரிசீலிக்கும் படி தமிழக அரசைக் கேட்டு கொள்கிறேன்,'' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications