இளைஞர்களின் "இன்ஸ்பிரேஷன்” நீங்கள்... ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி சொன்ன ரஜினி
சென்னை: பத்மவிபூஷன் விருது கிடைத்ததற்காக வாழ்த்துக் கூறிய திமுக பொருளாளர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகை குஷ்பு ஆகியோருக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றிகளைத் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினி.
மிகச் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு 2016ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் பத்மவிபூஷண் விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ரஜினிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
|
ஸ்டாலினின் வாழ்த்து...
திமுக பொருளாளர் ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக ரஜினியையும், டாக்டர் சாந்தாவையும் அவர் பாராட்டியுள்ளார்.
|
நன்றி...
ஸ்டாலினின் இந்த வாழ்த்துக்கு ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்து கொண்டு, அதன் மேலே தன் நன்றிகளை அவர் பதிவு செய்துள்ளார்.
|
குஷ்பு...
இதேபோல், தனக்கு வாழ்த்துக் கூறிய நடிகை குஷ்புவிற்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். தனது வாழ்த்தில், ‘நீங்கள் இந்த விருதிற்கு தகுதியானவர் தலைவா' என குஷ்பு பாராட்டியுள்ளார். அதற்கு தேங்க்யூ குஷ்பு என்று பதில் கொடுத்துள்ளார் ரஜினி.
|
சந்திரபாபு நாயுடு...
ரஜினிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடுவின் வாழ்த்துகளுக்கும் ரஜினி தனது டிவிட்டர் வாயிலாகவே நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
|
அனைவருக்கும் நன்றி...
இது மட்டுமின்றி தனக்கு நேரில், போனில் மற்றும் அறிக்கை வாயிலாக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் டிவிட்டர் வாயிலாக ரஜினி நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications