யாரும் தப்பா நினைக்க கூடாது.. ரஜினிகாந்த் அதிமுகவுக்கு சொன்ன 'அந்த' அட்வைஸ்
Recommended Video

சென்னை: அதிமுக ஆண்டு விழாவுக்கு எம்ஜிஆர் போட்டோ அருகே, கலைஞர் போட்டோ வைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
சென்னையில் காமராஜர் அரங்கில் நடிகர் சங்கம் சார்பில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அவர் மகனும் நடிகருமான, உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது:
யாரும் தப்பா நினைக்க கூடாது. அதிமுக ஆண்டு விழாவுக்கு புரட்சி தலைவர் (எம்ஜிஆர்) போட்டோ வைக்கிறார்கள். அதற்கு பக்கத்திலேயே கலைஞர் போட்டோ வைக்க வேண்டும். அவரை (எம்ஜிஆரை) அந்த கட்சியில் இருந்து நீக்கினார். அதன் பின்னால் யார் யார் இருந்தார்கள், யார் யார் தூண்டிவிட்டார்கள் என்பது வரலாறு அறிந்தவர்களுக்கு தெரியும். எத்தனையோ வஞ்சனைகளை அவர் உடன் பிறப்புகளுக்காக எதிர்கொண்டார்.

இருட்டில்இருந்த சரித்திர நாயகர்களை எல்லாம், பல்லவர், பாண்டியர் என பலரையும் பாமரர் முதல் பண்டிதர் வரை தனது எழுத்தால் கொண்டு சேர்த்தவர் கலைஞர். எம்ஜிஆரை ஸ்டார் ஆக்கியது, கருணாநிதி வசனத்தில் வெளியான, மலைக்கள்ளன் திரைப்படம். ஒரே திரைப்படத்தில் சிவாஜியை சூப்பர் ஸ்டாராக்கியதும் கலைஞர்தான்.
கலைஞர் மறைவை தாங்க முடியவில்லை. டிவியில் பார்த்தேன். கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும், கோபாலபுரம் சென்றேன். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் திரும்பிவிட்டேன். ராஜாஜி ஹாலில் சென்று, கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன். அப்போது சில ஆயிரம் பேர்தான் இருந்தனர். இவ்வளவு பெரிய தலைவருக்கு இவ்வளதான் கூட்டமா என்று நினைத்து வீட்டில் வந்து படுத்தேன். தூங்கி முழித்து மதியம் 1 மணிக்கு பார்த்தேன். டிவியில் அலை அலையாக கூட்டம் வந்தது. அதை பார்த்ததும், தமிழர்கள் நன்றி மறக்காதவர்கள் என நினைத்து எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications