இன்னொரு விஜயகாந்த்தாக மாறுகிறாரா ரஜினி?.. வட மாவட்டங்களுக்கு குறி!
வடதமிழக வாக்குகளை குறிவைத்து வியூகம் வகுக்கிறாராம் ரஜினிகாந்த்.
Recommended Video

சென்னை: சினிமாவில் ரஜினிகாந்த் சீனியர் என்றாலும் அரசியலில் விஜயகாந்த் சீனியர்... விஜயகாந்த் பாணியிலேயே தற்போதும் வடமாவட்டங்களை குறிவைத்து வியூகம் வகுக்கிறாராம் ரஜினிகாந்த்.
கமல்ஹாசனைப் போல ரஜினிகாந்த் சட்டென கட்சி தொடங்கவில்லை. தற்போது ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

அதேநேரத்தில் தமிழக அரசியல் தொடர்பாக தீவிரமான ஆலோசனைகளையும் நடத்தி வருகிறார் ரஜினிகாந்த். அண்மையில் ரஜினியை மிகக் கடுமையாக எதிர்க்கும் வட தமிழகத்தில் கோலோச்சும் கட்சியின் பிரமுகர் ஒருவர் சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பை ரஜினிகாந்தே எதிர்பார்க்கவில்லையாம். அதனால் மனம் விட்டு பல விஷயங்களை, கேள்விகளை கேட்டு தெளிவானாராம் ரஜினிகாந்த்.
வட மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களில் குறிப்பிட்ட சிலரே திமுகவில் காலம் காலமாக கோலோச்சி வருகின்றனர். இதனால் திமுகவில் கடும் அதிருப்தி இருந்து வருகிறது.
இந்த அதிருப்தியை அறுவடை செய்வது குறித்தும் இச்சந்திப்பில் விவாதித்திருக்கிறார் ரஜினிகாந்த். அத்துடன் தம்மை சந்தித்த சில பிரபலங்களிடம் எதிர்காலத்தில் வடதமிழகத்தில் கோலோச்சும் அந்த கட்சியுடன் இணைந்து செயல்பட்டால் எப்படி இருக்கும்? எனவும் விவாதிக்க தொடங்கியுள்ளாராம் ரஜினிகாந்த்.












Click it and Unblock the Notifications