புதிய இந்தியா பிறந்துள்ளது... மோடியின் அறிவிப்புக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு!
மோடியின் அறிவிப்பால் புதிய இந்தியா பிறந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை: ரூ500, ரூ1000 நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கருப்புப் பணம் மற்றும் கள்ளநோட்டு புழக்கத்தை முடிவுக்கு கொண்டு வர அதிரடியாக ரூ500 மற்றும் ரூ1,000 நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு பதிலாக புதிய ரூ500, ரூ2,000 நோட்டுகள் நவம்பர் 10-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டும் மறுபுறம் விமர்சனங்களும் பாய்ந்து வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கைக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Hats off @narendramodi ji. New india is born #JaiHind
— Rajinikanth (@superstarrajini) November 8, 2016
மேலும் மோடியின் அறிவிப்பால் புதிய இந்தியா பிறந்துள்ளதாகவும் ரஜினிகாந்த் 'மகிழ்ச்சி' தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் ரூ500, ரூ1000 நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதிக்கும் போது கருப்புப் பணம் வெளியே வரும் என யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது குறீப்பிட்டத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications