வினுசக்கரவர்த்தி மறைவு: ரஜினி, விஜயகாந்த் இரங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகர் வினுசக்கர்த்தி மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

நடிகர வினுசக்கரவர்த்தி நேற்றிரவு சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.

Rajinikanth and Vijayakanth condolence for vinu chakravarthy death

வினுசக்கரவர்த்தி மறைவுச் செய்தி அறிந்ததும், டிவிட்டரில் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

அதேபோல் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நடிகர் வினுசக்கரவர்த்தி மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கலையுலகில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருந்தார், என்னுடன் கஜேந்திரா உட்பட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுளாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். நண்பர் வினுசக்கரவர்த்தி, விஜயா மருத்துவமனையில் இருக்கும் பொழுது நான் நேரில் சென்று நலம் விசாரித்ததையும் நினைவு கூறுகிறேன். இவரது இழப்பு அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+