தை 1-ம் போச்சு... சித்திரை 1-ஆம் தேதியாவது அறிவிப்பாரா ரஜினி... ரசிகர்கள் வெயிட்டிங்!
தை மாதம் 1-ஆம் தேதியும் போயே போச்சு, இனி சித்திரை 1-ஆம் தேதியாவது ரஜினி காந்த் கட்சி குறித்த விவரங்களை அறிவிப்பாரா என்று ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துகிடக்கின்றனர்.
சென்னை: ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்புகளை தை மாதம் 1-ஆம் தேதி அறிவிப்பார் என்று தகவல்கள் கூறிவந்த நிலையில் தற்போது தை 1-ம் போச்சு, சரி சித்திரை 1-ஆம் தேதியாவது அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்துகிடக்கின்றனர்.
ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தான் அரசியல் கட்சியை தொடங்க போவதாகவும் வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்றும் அவர் அறிவித்தார்.
பின்னர் ஆங்கில புத்தாண்டில் கட்சிக்கான இணையதளத்தை அறிமுகப்படுத்தினார். இதில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மக்கள் தொகை கால்வாசி
கட்தி தொடங்குவதற்கு முன்னர் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என ரஜினி திட்டமிட்டுள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மன்றத்தினர் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீயாய் வேலை பார்த்து வருகின்றனர். இது கிட்டதட்ட தமிழக மக்கள்தொகையில் பாதி ஆகும்.

போன் நம்பர்
அவ்வாறு உறுப்பினராக சேருபவர்களிடமிருந்து புகைப்படம், பெயர், தொழில், தொலைபேசி எண் ஆகியவற்றை நிர்வாகிகள் கேட்டு பெறுகின்றனர். முன் பின் தெரியாத மன்றத்தினரிடம் போட்டோவையும், போன் நம்பரையும் தர பெண்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

உறவினர்களின் நம்பர்
இதை அறிந்த ரஜினிகாந்த் பெண் உறுப்பினர்களின் சகோதரர், தந்தை, கணவர் உள்ளிட்ட ஆண் சொந்தங்களின் எண்களை பெற்றுக் கொள்ளுமாறும் பெண் உறுப்பினர்களின் அட்டையில் புகைப்படம் இல்லாமலும் வழங்க அறிவுறுத்தியுள்ளார். உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்த ரசிகர் மன்ற நிர்வாகி விஎன் சுதாகர் தலைமையில் ஒரு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் காத்திருப்பு
இந்நிலையில் பொங்கல் பண்டிகையான தை 1-ஆம் தேதி கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிமுகப்படுத்துவார் என்று சுற்றுவட்டாரத் தகவல்கள் கூறிவந்தன. ஆனால் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனவே ரஜினி வரும் தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14-ஆம் தேதி (சித்திரை 1) கட்சி கொடி, பெயர், சின்னம், கட்சி நிர்வாகிகள் குறித்த தகவல்களை அறிவிப்பார் என்று தகவல்கள் கூறுகின்றனர். இதனால் ரசிகர்கள் இன்னும் 3 மாதங்களுக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சித்திரை 1-ல் ஆவது அறிவிப்பாரா.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications