ரஜினி அரசியலுக்கு வர 6 மாத காலமாகும் ... அண்ணன் சத்யநாராயண ராவ்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு 6 மாத காலம் ஆகலாம் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்தார்.
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு 6 மாத காலம் ஆகலாம் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்தார். ஆனால் பாஜகவுடன் சேர வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி தான் இப்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது. கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்தபோதே அவர் அரசியலுக்கு வருவார் என்ற சமிஞ்சை கொடுத்துவிட்டார்.

இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இந்நிலையில் அவரது பிறந்தநாளின் போது கட்சி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிந்தது. ஆனால் இந்த மாதம் இறுதியிலேயே அவர் அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாக நமது தளம் செய்தி வெளியிட்டிருந்தது.
இதற்கேற்ப ரஜினிகாந்த் வரும் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை அடுத்த கட்டமாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்கிறார். அப்போது நிச்சயம் ஏதாவது அறிவிப்பு இருக்கும் என்று தெரிகிறது. இந்த சந்திப்பு நிச்சயம் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக அமைய வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில் கிருஷ்ணகிரியில் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ரஜினி அரசியலுக்கு நிச்சயம் வருவார்.
ஆனால் அவர் பாஜகவுடன் சேர வாய்ப்பு இல்லை. அவர் அரசியலுக்கு வர 6 மாத காலம் ஆகலாம் என்றார் சத்யநாராயண ராவ்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?












Click it and Unblock the Notifications