ரஜினிக்கு உள்ளாட்சித் தேர்தல்தான் முதல் டார்கெட்… நற்பணி மன்றக் கொடி.. சின்னம்.. அசைன்மெண்ட் ரெடி
தமிழகத்தில் வர உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதுதான் ரஜினிக்கு முதல் டார்கெட்டாம். அதற்காக நற்பணி மன்றத்தின் பெயரில் கொடி மற்றும் சின்னம் பெற ஜோரான ஏற்பாடுகள் நடக்கிறதாம்.
சென்னை; கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதே அரசியல் பரபரப்பாகிவிட்டது.
5 நாட்கள் 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து வந்த அவர், கடைசி நாளில் உரையில், அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் திறமையான தலைவர்கள் இருந்தும் பயனில்லை என்றும் ரஜினி பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது.

தனிக்கட்சி
இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதியாகிவிட்டது என்று ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் உறுதியாக கூறியுள்ளார். அதே போன்று ரஜினிகாந்த் தனிக்கட்சிதான் தொடங்குவார் என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல்
ஆனால் தனிக் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே, தமிழகத்தில் வர உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ரஜினி தயாராகி வருகிறார். ஜூன் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், உடனடியாக நடக்க தேர்தலில் கால் வைத்து ஆழம் பார்க்க நினைகிறார் ரஜினி.

கொடி, சின்னம்
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, ரசிகர் மன்றப் பெயரில் கொடி மற்றும் சின்னம் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ரஜினி ரசிகர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் தீவிரமாக உள்ள ரஜினி, சின்னம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

களத்தில்..
தனிக்கட்சி தொடங்கி சட்டசபைத் தேர்தலை சந்திக்கும் முன்பாகவே ரசிகர் மன்றத்தின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்க் கொள்ளத் தயாராகிவிட்டன ரசிகர் மன்றங்கள். ஏற்கனவே பல முறை ரஜினி ரசிகர்கள், மன்றத்தின் சார்பாக இல்லாமல் சுயேட்சியாக உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளனர் என்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications