நோட்டாவை தவிர நோ ஆப்சன்ஸ்... ரஜினி + பாஜக + அதிமுக?
ரஜினிகாந்த் கூட்டணி வைக்க சாத்தியமான ஒரே ஒரு கட்சி பாஜகதான்.
Recommended Video

சென்னை: தமிழக அரசியலின் திசைவழி போக்கு புலப்படத் தொடங்கி இருக்கிறது. ஆனால் கட்சி தொடங்குவதாக சொன்ன ரஜினி, காலூன்றுவதாக சொன்ன பாஜக, இரட்டை குழல் துப்பாக்கி என கர்ஜித்த அதிமுக இந்த மூன்றும் மவுனிகளாக காய்நகர்த்தி வருகின்றன.
சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்ஜிஆர் போல ஆட்சி வழங்குவேன் என சபதம் எடுத்தவர் ரஜினிகாந்த். ரஜினி மக்கள் மன்றத்தை வட அமெரிக்கா, கனடா வரை தொடங்குகிறார்.

ஆனால் கட்சி பெயர்தான் என்ன என்று அறிவிக்கவில்லை. ஒருவேளை அதை கேட்டால், ஒரு நிமிஷம் தலை சுற்றிவிட்டது என்பாரோ தெரியவில்லை. அவரது வருகைக்காகவும் தமிழக அரசியல் களம் காத்திருக்கிறது.
அதுவும் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர்தான் முதல்வர் என அரசியல் அதிமேதாவி சாருஹாசன் ஆருடம் கூறிவிட்டார். அதனால் ஆவலுடன் தமிழக மக்கள் அரியாசனம் தர ரஜினிகாந்துக்காக காத்திருக்கிறார்.
அவர் கட்சி பெயரை அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலும் ஆன்மீக அரசியலுக்கு இயல்பான கூட்டணியாக இருக்கப் போவது பாஜகதான். அது நேரடியாகவோ மறைமுகமாகவோ இருக்கலாம். ஒருகாலத்தில் அதிமுகவையும் காங்கிரஸையும் இயற்கையான கூட்டணி கட்சிகள் என்பார்கள் அதுபோல ரஜினியும் பாஜகவும் இப்போது களத்தில் இருக்கின்றன.
தமிழக அரசியல் அதிமுக, திமுக அணிகள் என்கிற நிலைமை மாறிவிட்டது. அதிமுகவின் முதுகில் யார் சவாரி செய்வது என்பதைக் கூட பாஜகதான் தீர்மானிக்கும் நிலையில் குனிந்து முதுகைக் காட்டிக் கொண்டிருக்கிறது. பாஜக கண்ணசைவு காட்டும் பக்கம்தான் அதிமுக நல்ல பிள்ளையாக ஓடி உட்காரும்.
அதிமுகவும் பாஜகவும் நேரடி கூட்டணி கட்சிகளாகவும் மறைமுகமாக ரஜினிகாந்த் இந்த கூட்டணியை ஆதரிக்கவும்தான் அனேகமான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த மூவரணி கூட்டணியாக முட்டிக் கொள்ள நோட்டாவைத் தவிர வேறு சுவர்களும் இல்லை என்பதே யதார்த்தமும் கூட.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications