வராதீங்க, வராதீங்க அரசியலுக்கு வராதீங்க... ரஜினி, கமலுக்கு மீண்டும் ஈ.வி.கே.எஸ். வேண்டுகோள்
ஈரோடு: ரஜினிகாந்தும், கமல் ஹாஸனும் அரசியலுக்கு வரக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
அரசியல் பற்றியும் அதன் ஆழம் பற்றியும் தெரியும். அரசியலுக்கு வர பயப்படவில்லை, தயங்குகிறேன் என்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்த லிங்கா இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில்,
தயவு செய்து அரசியலுக்கு வராதீர்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாஸனை கேட்டுக் கொள்கிறேன். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணைகள் கட்ட திட்டமிட்டுள்ளதால் பல பிரச்சனைகள் ஏற்படும். இந்த திட்டத்தை எதிர்த்து தமிழக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என்றார்.
ரஜினி அனைவருக்கும் பொதுவானவர் அதனால் அவர் அரசியலுக்கு வரக் கூடாது என்று முன்பும் இளங்கோவன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி, கமல் வரக் கூடாது என்று கூறும் இளங்கோவன் நடிகர் கார்த்திக்கையும் வரக் கூடாது என்பாரா என தெரியவில்லை. ஏற்கனவே திமுகவில் இருந்த சிவாஜி கணேசன் காங்கிரஸுக்கு வந்தது தவறு என்றும் சொல்வாரா? இளங்கோவன். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மறைவுக்கு பிறகு சிவாஜி கணேசன் துவங்கிய
தமிழக முன்னேற்ற முன்னணியில் சேர்ந்தவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications