ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஸ்கிரீனை பாலை ஊற்றி சேதப்படுத்திய அஜித் ரசிகர்கள்.. தியேட்டர் நிர்வாகம் வேதனை
நெல்லை: விவேகம் டீசர் ரிலீஸ் நிகழ்வை, நள்ளிரவில் பார்த்து ரசித்த அஜித் ரசிகர்கள், உணர்ச்சிவசப்பட்டு, ஸ்கீரின் பாலை ஊற்றியதால் சேதமாகிவிட்டதாக நெல்லையை சேர்ந்த ராம் முத்துராம் தியேட்டர் நிர்வாகம் சமூக வலைத்தளமான டிவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளது.
நெல்லையிலுள்ள ராம் முத்துராம் தியேட்டரில், திரைப்படத்தையும் தாண்டி, ரசிகர்களை ஈர்க்க புதுவகை டெக்னிக்குகள் கையாளப்படுவதுண்டு.
பெரிய நடிகர்களின் டிரைலர்கள், டீசர்கள் வெளியாகும்போது, அதையும் தியேட்டரில் வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட்ட மனநிலையில் வைப்பது இந்த தியேட்டர் வாடிக்கை.
விவேகம் டீசர்
இதேபோல இன்று அதிகாலை 12.01 மணிக்கு அஜித் நடித்த விவேகம் திரைப்படத்தின் டீசர் வெளியானதால், அதையும் லைவாக காட்டியது இந்த தியேட்டர். ரசிகர்களுக்கு இலவசம் என்ற அறிவிப்பையும் தியேட்டர் வெளியிட்டிருந்தது.
|
அதிர்ந்த அரங்கம்
எதிர்பார்த்ததை போலவே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால், அரங்கமே ஆர்ப்பரித்தது. ஆனால் உணர்ச்சிவசத்தில், ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஸ்கீரினில் ரசிகர்கள் சிலர் பாலாபிஷேகம் செய்துவிட்டனராம்.
|
போச்சே, போச்சே
இதுகுறித்து, ராம்முத்துராம் தியேட்டர் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டில், "ரூ.5 லட்சம் மதிப்புள்ள சில்வர் ஸ்கிரீனில் பால் அபிஷேகம் செய்துவிட்டனர். நாங்கள் முழு சுதந்திரம் கொடுத்தோம். பதிலுக்கு நாங்கள் இதை பெற்றுள்ளோம். நன்றி" என வேதனை தொனியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரி செய்யும் பணி தீவிரம்
மேலும், வெள்ளிக்கிழமையான நாளைக்குள், ஸ்கிரீன் சரி செய்யப்படும் என நம்புவதாகவும் அந்த தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்கிரீன் போட்டோவையும் வெளியிட்டுள்ளது.

கலாய்ப்பு
இதனிடையே இந்த தகவல் மீண்டும் ரசிக சண்டைக்கு வழி வகுத்துள்ளது. மிக விரைவாக அதிக ரசிகர்களை ஈர்த்த டீசர் என்ற சாதனையை விவேகம் டீசர் ஈட்டியது. ஆனால் நெல்லை ரசிகர்களின் செயலால், இப்போது அஜித் ரசிகர்களை பிற நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications