For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மன் கோவில்களில் கூழ் ஊற்ற அரிசி கொடுங்க.. ஜெ.வுக்கு ராம. கோபாலன் கோரிக்கை

Google Oneindia Tamil News

Rama Gopalan demands TN govt to offer free rice to Amman temples
சென்னை: மசூதிகளில் ரம்ஜானையொட்டி அரிசி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது போல, அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவதற்கும் அரிசி கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.

இதுகுறித்துஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வரின் ஆணைப்படி 3000 மசூதி / தர்க்காக்கு 4500 மெட்ரிக் டன் அரிசி வழங்குவதாக தமிழக அரசின் பத்திரிகை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

பசித்திருக்கும் மக்களுக்கு அன்னதானம் வழங்குவது, கூழ் அளிப்பது நல்ல விஷயம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மசூதிக்கு அரிசி தரும் தாயுள்ளம் ஏன் பல்லாண்டுகளாக ஆடிக்கூழ் ஊற்றும் அம்மன் கோயில்களுக்கு அரிசி வழங்குவதில்லை?

தமிழக முதல்வர் தாம் பதவி ஏற்றபோது, எடுத்துக்கொண்ட பிராமாணத்தில் இறைவன் மீது ஆணையாக தாம் பாரபட்சமாக நடக்க மாட்டேன் என்று எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு மசூதிக்கு மட்டும் அரிசி வழங்கும் செயல் பாரபட்சமாக இல்லையா?

அறநிலையத்துறையின் இரும்புக்கோட்டையில் சிக்கி சீரழியும் திருக்கோயில்களில் கல்லா கட்டும் சில நூறு கோயில்களில் மட்டும் அன்னதானத் திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்தார். தமிழக முதல்வர் அதனை அறிவித்தார் என்பது மட்டுமே அவரது சாதனையின் பங்காக இருக்கலாமா?

அன்னதான திட்டத்தை நடத்திட யானை உருவில் பக்தர்களை பயமுறுத்தும் பெரிய பெரிய உண்டியல், அதுவும் கோயில் பணத்தில் வைத்து பக்தர்களிடம் வசூலித்தே அன்னதானம் நடைபெறுகிறது. தமிழக முதல்வர் தனது ஆணைக்கு மதிப்பளிக்க தமிழக அரசின் பொது விநியோகத்துறையிலிருந்து தேவையான நல்ல அரிசியை அளித்திருக்க வேண்டாமா?

தமிழக முதல்வர் தமிழகத்தில் உள்ள ஆடி கூழுக்கு அம்மன் கோயிலுக்கும், அன்னதான திட்டம் செயல்படுத்தம் திருக்கோயில்களுக்கும் தேவையான அரிசியை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Hindu Munnani leader Rama Gopalan has demanded the TN govt to offer free rice to Amman temples to make porridge during the month of Aadi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X