For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிறிஸ்வத மதத்தின் பெயரால் மக்களை அச்சுறுத்தி வருபவர் உமாசங்கர்... ராம கோபாலன்

Google Oneindia Tamil News

சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீது தமிழக தலைமைச் செயலாளர் எடுத்த நடவடிக்கையை இந்து முன்னணி வரவேற்கிறது. கிறிஸ்தவ மதத்தின் பெயரால் மக்களை அச்சுறுத்தி வருபவர் இவர். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

Rama Gopalan welcomes govt action against Umashankar IAS

தமிழக அரசு அதிகாரியாக இருக்கும் உமாசங்கர் அவர்கள் தொடர்ந்து பெந்தகோஸ்தே கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததை இந்து முன்னணி கண்டித்துள்ளது, தொடர்ந்து தமிழக அரசுக்கு புகாராகவும் கொடுத்துள்ளது. சமூகத்தில் பதட்டம் தொடர்ந்த நீடித்த நிலையில் தற்போது உமாசங்கர் மீது தமிழகத் தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதை இந்து முன்னணி வரவேற்கிறது.

ஓர் அதிகாரி பதவி ஏற்கும்போது, சமூகத்தில் எந்தவித பாகுபாடுமின்றி செயல்பட உறுதி ஏற்கிறார். அப்படி பதவி ஏற்ற உமாசங்கர், கிறிஸ்தவ மதப்பிரச்சாரக் கூட்டங்களில் பகிரங்கமாக கடந்த சில ஆண்டுகளாக கலந்துகொண்டு வந்துள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுத்தால் அதற்கு அரசியல் சாயம் பூசி தப்பித்தும் வந்தார்.

உமாசங்கர் இந்துக்களுக்குரிய சலுகையை பெற்று ஐ.ஏ.எஸ். ஆகவும், பதவி உயர்வும் பெற்றவர், கிறிஸ்தவராக இருப்பதாக புகார் எழுந்தபோது, தான் இந்து தான், கிறிஸ்தவரில்லை என கூறி தப்பினார். ஆனால், தொடர்ந்து மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததை இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் காவல்துறை சில இடங்களில் கூட்டத்தை ரத்து செய்தது, சில இடங்களில் பாதுகாப்பு அளித்து நடத்தவும் அனுமதி அளித்தது.

இவை வெறும் மதக்கூட்டங்கள் இல்லை, மூட நம்பிக்கைகளை வளர்க்கவும், மக்களை ஆசை வார்த்தைகூறி, அச்சுறுத்தி மதமாற்றும் கூட்டமாக நடைபெற்று வந்துள்ளது. ஓர் அதிகாரி இதுபோன்ற கூட்டங்களில் கலந்துகொள்ளக்கூடாது என்பது தார்மீகக் கடமை. இக்கூட்டங்களில் மதப் பிரச்சாரமும் செய்தார் என்பது கவனிக்கத்தக்கது.

ஒருவர் தான் சார்ந்த மத நிகழ்ச்சிகளிலோ அல்லது நல்ல எண்ண அடிப்படையிலோ தனிப்பட்ட முறையில் மத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என்பது தவறில்லை என்றாலும், மதப்பிரச்சாரம் செய்வது என்பது அரசின் விதிமுறைகளை மீறிய செயல் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மேலும் இவர் ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதை பகிரங்கமாக சுவரொட்டிகளில் வெளியிட்டு மதப்பிரச்சாரம் நடைபெற்றது கடுமையான குற்ற செயலாகும்.

இந்நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உமாசங்கரை எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளதற்கும் அவர் உள் அர்த்தம் கற்பிப்பத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இவர் மீது பல வழக்குக்களை இந்து முன்னணி பதிவு செய்துள்ளது. மதப்பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்தது மட்டுமல்ல, மக்களை கிறிஸ்தவ மதத்தின் பெயரால் அச்சுறுத்தவும் செய்துள்ளார். உலகம் அழிந்துவிடும் என பயமுறுத்தி உள்ளார். தான் கனவில் கண்டதாகவும், ஏசு தனக்கு காட்சி கொடுத்ததாகவும் பல பேட்டிகளில் கூறியுள்ளார். இத்தகை மன நோய் உள்ளவர் அரசு அதிகாரியாக தொடர்வது சமூகத்திற்கு நல்லதல்ல.

இவரது கடந்த கால செயல்பாட்டையும் தமிழக அரசு ஆராய்ந்து, இவர் பாரபட்சமாக நடந்துகொண்டிருந்தால் அதற்கும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமைச் செயலாளரின் எச்சரிக்கை கடிதத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இவரது செயலுக்கும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Hindu Munnani leader Rama Gopalan has welcomed the govt action against Umashankar IAS.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X