எங்கே சென்றது தமிழக அரசு? பன்னீர் செல்வம் அரசை கடுமையாக சாடிய ராம மோகன ராவ்
சென்னை: தலைமைச் செயலராக இருந்த எனது அலுவலகத்திற்குள் மத்திய ரிசர்வ் போலீஸ் படை நுழைந்ததது. இதை தடுக்காமல் எங்கே போனது தமிழக அரசு என்று காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ராம மோகனராவ் தெரிவித்தார்.
அண்ணா நகரிலுள்ள அவரது இல்லத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்த ராம மோகன ராவ் கூறுகையில், "மேடம் (ஜெயலலிதா) உயிரோடு இருந்திருந்தால் சிஆர்பிஎப் தலைமைச் செயலகம் உள்ளே வந்திருக்க முடியாது.

ஒரு மாநில அரசின் தலைமைச் செயலர் அறைக்குள் எப்படி சி.ஆர்.பி.எப் போகலாம்? அப்படி என்ன கண்டுபிடித்தார்கள்? ஒன்றும் இல்லை? எனது மகன் பெயரில் சோதனை வாரண்ட் கொண்டு வந்துவிட்டு எனது வீட்டில் அவர்கள் சோதனை நடத்தியது ஏன்? நான் குறி வைக்கப்பட்டுள்ளேன்.
என்னை, 26 மணி நேரம் ஹவுஸ் அரெஸ்ட் செய்திருந்தனர். முதலில் என்னை டிரான்ஸ்பர் செய்துவிட்டே பிறகு சோதனை செய்திருக்கனும். ஆனால் தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்குள் சி.ஆர்.பி.எப் நுழைந்தது தமிழகம் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதைதான் காண்பிக்கிறது.
எங்கே சென்றது தமிழக அரசு? ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது. நான் புரட்சி தலைவி அம்மாவால் நியமிக்கப்பட்ட தலைமைச் செயலாளர். இன்னமும் என்னை சஸ்பெண்ட் செய்த உத்தரவை அரசு காண்பிக்கவில்லை. எனவே இப்போதும் நான்தான் தமிழக அரசின் தலைமைச் செயலாளர். இப்போது உள்ள தலைமைச் செயலாளர் ஒருவேளை பொறுப்பு தலைமைச் செயலாளராகத்தான் நியமிக்கப்பட்டிருப்பார் என்று நினைக்கிறேன். இவ்வாறு ராம மோகன ராவ் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications