கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் நுழைந்தது விஎச்பியின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை!
கேரளாவில் இருந்து தமிழக எல்லையான கோட்டை வாசல் பகுதிக்கு விஎச்பியின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை வந்து சேர்ந்தது.
Recommended Video

நெல்லை: கேரளாவில் இருந்து தமிழக எல்லையான நெல்லை மாவட்டம் கோட்டை வாசல் பகுதிக்கு விஎச்பியின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை வந்து சேர்ந்தது.
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் ஆதரவு அமைப்பு சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ராமராஜ்ய ரத யாத்திரை தொடங்கியது.
இந்த ரத யாத்திரை பல்வேறு மாநிலங்களை கடந்து கேரளா மாநிலத்தில் இருந்து நெல்லை மாவட்டம் வழியாக தமிழகம் வருகிறது.இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

144 தடை ஆணை
இந்த ரத யாத்திரைக்கு எதிராக நெல்லை மாவட்ட கலெக்டரிடமும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே நெல்லை மாவட்டத்தில் வரும் 23 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடும் எதிர்ப்பு
இந்நிலையில் கேரளாவில் இருந்து தமிழக எல்லையான நெல்லை மாவட்டம் கோட்டை வாசல் பகுதிக்கு ரத யாத்திரை வந்துள்ளது. விஎச்பி ரத யாத்திரைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கோட்டை வாசல்
கடும் எதிர்ப்பை மீறி தமிழக அரசு ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து தமிழக எல்லையான கோட்டை வாசல் பகுதிக்கு ரத யாத்திரை வந்து சேர்ந்தது.

போராட்டம் - கைது
ரத யாத்திரை தமிழகத்தில் நுழைய எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் தமுமுக, எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications