ஜெயலலிதா பிறந்த நாளுக்காக மருத்துவ முகாம் நடத்த தனியார் மருத்துவமனைகளை மிரட்டுவதா? ராமதாஸ் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்கள் நடத்திட வேண்டும் என்று தமிழக அரசுத் தரப்பில் நெருக்கடி அளிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி மாநிலம் முழுவதும் 680 மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்தித் தர வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அரசுத் தரப்பில் நெருக்கடி அளிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஜெயலலிதாவுக்கு புகழ் சேர வேண்டும் என்பதற்காக தனியார் மருத்துவமனைகளுக்கு நெருக்கடி கொடுப்பது கண்டிக்கத்தக்கது.

Ramadoss condemned to state government

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு மருத்துவமனையும் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக குறைந்தது 2 முதல் 3 மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்தித் தர வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆணையிட்டிருக்கிறார். மருத்துவ முகாம்களை நடத்த முன்வராத மருத்துவமனைகள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து நீக்கப்படுவதுடன், இதுவரை அந்த மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை வழங்கப்படாது என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு ஜெயலலிதாவின் 67 ஆவது பிறந்த நாளுக்காக தமிழ்நாடு முழுவதும் 670 மருத்துவ முகாம்கள் இதே பாணியில் தான் நடத்தப்பட்டன. அப்போது ஜெயலலிதா எந்த பதவியிலும் இல்லை. ஊழல் செய்து சொத்துக் குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்டு, முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட குற்றவாளியாக இருந்தார். ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் பிறந்த நாளுக்காக அரசு எந்திரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட அவல வரலாறு கடந்த ஆண்டு எழுதப்பட்டது.

இந்த வகை அத்துமீறல்களுக்கும் அடிப்படை காரணம் என்னவெனில், 5 வருடங்கள் தமிழகத்தை ஆட்சி செய்யும் பொறுப்பை மக்கள் நம்மிடம் கொடுத்துவிட்டார்கள்... இந்த காலத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதில் தொடங்கி மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது வரை எதை செய்தாலும் யாரும் நம்மை கேட்க முடியாது என்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் மனதில் எழுந்துள்ள ஆணவம் தான். அந்த ஆணவத்தை அடுத்த சில வாரங்களில் சுக்குநூறாக மக்கள் நொறுக்கப்போவது உறுதி." என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+