பலே பலே... "மீம்ஸ்" போடுவதில் எல்லோரையும் மிஞ்சி வருகிறார் டாக்டர் ராமதாஸ்!
சென்னை: மக்களை டிசைன் டிசைனாக ஏமாற்றுவதே அதிமுக அரசின் சாதனை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மற்ற கட்சிகளைப் போலவே சமூகவலைதளத்தை தேர்தல் நேரத்தில் கருவியாகப் பயன்படுத்த பாமகவும் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, சமீபகாலமாகவே ஆளும் அரசு மற்றும் எதிர்க்கட்சிகளைத் தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சிப்பதை வாடிக்கையாக்கி இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

டிவிட்டர் மீம்ஸ்...
ஊடகங்களில் அறிக்கைகள் வாயிலாக எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் ராமதாஸ், சமூகவலைதளத்தில் ஒரு சில வரிகளில் நச்சென கருத்துக்களைப் பதிவு செய்கிறார். பார்ப்பதற்கும் இவைகளும் மீம்ஸ்கள் போலவே இருக்கின்றன. என்ன காமெடி புகைப்படங்களைத்தான் அவர் பதிவேற்றம் செய்வதில்லை.
|
டிசைன் டிசைனாக ஏமாற்று...
அந்தவகையில் இன்றும் சில கருத்துக்களை ராமதாஸ் பதிவு செய்துள்ளார். அதில் ஒன்றில், ‘புதிய முதலீட்டில் 7 திட்டங்களின் உற்பத்திய ஜெயலலிதா தொடங்கி வைத்தார்: மக்களை டிசைன் டிசைனாக ஏமாற்றுவதே அதிமுக அரசின் சாதனை!' என அவர் தெரிவித்துள்ளார்.
|
பழைய திட்டம்...
மற்றொரு டிவிட்டில், ‘முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட 7 திட்டங்கள் தொடக்கம்: 4 மாதங்களில் பணிகள் முடிந்ததனவா? இவை பழைய திட்டம் என்பதற்கு சாட்சி தேவையா?' எனக் குறிப்பிட்டுள்ளார்.
|
சூப்பர் அரசியல்...
ஆளும் அரசை மட்டுமின்றி மாணவர்கள் தற்கொலை செய்யக்கூடாது என்ற கருணாநிதியின் அறிக்கையையும் அவர் விமர்சித்துள்ளார். அதில் அவர், ‘பிள்ளையையும் கிள்ளுவோம்... தொட்டிலையும் ஆட்டுவோம்... சூப்பர் அரசியல் தலைவரே!' எனப் பதிவு செய்துள்ளார்.
|
உங்களால் தானே...
அப்பாவைச் சொன்னவர் மகனை மட்டும் விடுவாரா, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வேலை என்ற ஸ்டாலின் பேச்சுக்கு, ‘போன 5 ஆண்டுகளில் வேலையற்றோர் எண்ணிக்கையை 73 லட்சமாக அதிகரித்ததே நீங்க தானே?' என விமர்சித்துள்ளார்.
|
இதுவே சாட்சி...
தனிப்பட்ட அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி சமூக அவலங்களையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சுட்டுக் காட்டியுள்ளார். கூட்டுறவு வங்கியில் ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு தழைத்தோங்குவதற்கு சாட்சி!' எனத் தெரிவித்துள்ளார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications