எம்.ஜி.ஆர். வீடு அதிமுக செலவில் சீரமைக்கப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்படும்: கலாய்க்கும் ராமதாஸ்
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முதல்வர் ஜெயலலிதா, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது கருத்துகளை அவ்வப்போது ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். சில நேரம் கடுமையாக விமர்சிப்பார், சில நேரம் அரசின் நடவடிக்கைகளை கண்டிப்பார் அல்லது கிண்டல் செய்வார்.
இன்று அவர் தனது ட்விட்டர் கணக்கில் கூறியிருப்பதாவது,
|
ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு காளை முட்டி பொன்.இராதாகிருஷ்ணன் காயம்: காளை கோபமாக இருப்பதாக கூறி ஜல்லிக்கட்டை நிறுத்தாமல் இருந்தால் சரி தான்!
|
அப்பா
திமுகவுக்கு ஆதரவாக புதிய கருத்துகணிப்பு:அப்பா மோதிரம் வாங்கிக் கொடுத்து போட சொன்னார்... மகன் கருத்துக்கணிப்பு கொடுத்து வெளியிடச் சொன்னார்!
|
ஸ்டிக்கர்
எம்ஜிஆர் வீடு அதிமுக செலவில் சீரமைக்கப்படும்:ஜெயலலிதா - அப்படியே வீட்டை சீரமைத்த விடிவெள்ளி என எம்.ஜி.ஆர் புகழ்வது போல ஸ்டிக்கர் ஒட்டப்படும்
|
ஜெயலலிதா
ஜெயலலிதா வாட்ஸ்-அப் விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதா? http://twitdoc.com/55L0


Click it and Unblock the Notifications
