ஆட்டு மந்தைகளிடம் எப்படி குதிரை பேரம் நடத்த முடியும்? தம்பித்துரை: ராமதாஸ் கலகல

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்களிடம் குதிரைபேரம் நடக்கவில்லை: தம்பித்துரை - உண்மை தான். ஆட்டு மந்தைகளிடம் எப்படி குதிரை பேரம் நடத்த முடியும்? என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் சூழல் மற்றும் தேசிய அரசியல் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் தினமும் கருத்து தெரிவித்து வருகிறார். தற்போது அவர் தம்பிதுரை, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோரை விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

குதிரைபேரம்

அதிமுக எம்.எல்.ஏக்களிடம் குதிரைபேரம் நடக்கவில்லை: தம்பித்துரை - உண்மை தான். ஆட்டு மந்தைகளிடம் எப்படி குதிரை பேரம் நடத்த முடியும்?

ஜெயலலிதா

ஜெயலலிதா மரண மர்மம் விலகும் வரை தர்மயுத்தம் தொடரும்: ஓ.பி.எஸ் - ஓஹோ... வாழ்நாள் முழுவதும் தர்மயுத்தம் தொடரும்னு சொல்லுங்க!

எம்ஜிஆர்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தில்லியே திரும்பிப் பார்க்கும்: செங்கோட்டையன் - நீங்கள் ஆட்சி நடத்தும் அழகை உலகமே திரும்பிப் பார்க்கிறதே?

பீகார்

பிகாரில் கல்விக்கட்டணம் செலுத்தாததற்காக மாணவியின் உடைகள் அவிழ்ப்பு: செய்தி - மனித நேயமற்ற மிருகங்களால் மட்டுமே இது சாத்தியம்!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PMK founder Dr. Ramadoss has made fun of ADMK MLAs on twitter.
Please Wait while comments are loading...