Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஸ் விலை உயர்வு பரிந்துரைக்கு டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரித் குழுவின் பரிந்துரைகள் எதையுமே ஏற்க முடியாது. இதை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். சமையல் காஸ் சிலிண்டர்கள் அளவைக் குறைக்கக் கூடாது, விலையை உயர்த்தக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Ramadoss
பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணய முறை குறித்து ஆலோசனை வழங்குவதற்கு அமைக்கப்பட்ட திட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினர் கிரித் பாரிக் தலைமையிலான வல்லுனர் குழு அதன் பரிந்துரைகளை அரசிடம் அளித்திருக்கிறது.

வல்லுனர் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைக்கு சிறிதும் ஒத்துவராதவையாக உள்ளன. டீசல் விலையை உடனடியாக லிட்டருக்கு ரூ.5 உயர்த்த வேண்டும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ஆறு ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும்போது, அதற்கேற்றவாறு டீசல் விலையை உயர்த்த வேண்டும், மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு ஆறாக குறைக்க வேண்டும், எரிவாயு விலையை உருளைக்கு ரூ.250 உயர்த்த வேண்டும்,

அடுத்த இரண்டு ஆண்டுகளில் சமையல் எரிவாயுவுக்கு வழங்கப்படும் மானியத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும், ஏழைகளின் எரிபொருளாக விளங்கும் மண்ணெண்ணெயின் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்த வேண்டும், அடுத்த சில ஆண்டுகளில் மண்ணெண்ணெய் வினியோகத்தை பெருமளவில் குறைக்க வேண்டும் என்று கிரித் பாரிக் குழு அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறது. இந்த பரிந்துரைகள் அனைத்துமே ஏற்கமுடியாதவை.

டீசல் விலை கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 4 மாதங்களில் லிட்டருக்கு ரூ.4.19 உயர்த்தப்பட்டிருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு சமையல் எரிவாயு விலை சமையல் எரிவாயு விலை ரூ.190 அதாவது 76% உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு போதாதென்று மேலும் விலையை உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைப்பது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை.

பெட்ரோலியப் பொருட்களின் விலையில் பெரும்பகுதி வரி தான். உலகில் வேறு எந்த நாட்டிலும் பெட்ரோலியப் பொருட்கள் மீது இந்த அளவுக்கு வரி விதிக்கப்படுவதில்லை.

பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணய முறை குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவினர், இந்த அளவுக்கு வரி விதிக்கப்படுவது சரியா? என்பது குறித்தும் ஆராய்ந்திருக்க வேண்டும். ஆனால், அதையெல்லாம் செய்யாத வல்லுனர் குழு எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை எப்படி அதிகரிக்கலாம் என்ற கோணத்திலேயே சிந்தித்து, அனைத்துப் பொருட்களின் விலைகளையும் உயர்த்தலாம் என்று பரிந்துரை அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சமையல் எரிவாயு எந்தவித எண்ணிக்கை உச்சவரம்பும் இல்லாமல் வழங்கப்பட்டு வந்தது. 2012 ஆம் ஆண்டு செப்டம்பரில் தான் வீடுகளுக்கு ஆண்டுக்கு 6 உருளைகள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதற்கு பிறகு தான் கடந்த ஜனவரி மாதத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் உருளைகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தப்பட்டது. இதை மீண்டும் ஆறு ஆக குறைக்க வேண்டும் என்று கிரித் பாரிக் குழு அளித்துள்ள பரிந்துரை மிகவும் பிற்போக்கானது.

பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிர்ணயிப்பதில் இறக்குமதி ஒப்புமை விலை முறை கடைபிடிக்கப் படுவதால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு இழப்பீடு என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ. 13,500 கோடி கூடுதல் லாபம் வாரி வழங்கப்படுவதாக குழுவில் இடம்பெற்றிருந்த நிதித்துறை இணைச் செயலாளர் சவுரவ் கார்க் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இதிலிருந்தே இந்த அறிக்கை அரசு மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் இலாபம் தேடித்தரும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட ஒன்று என்பதை உணர முடியும். இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுவிடும். எனவே, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்கு எதிரான கிரித் பாரிக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+