"டிமான்டி காலனி" நாயகன் அருள் நிதி திருமண வரவேற்பு.. "கேப்டன்" வரவில்லை.. ராமதாஸ் ஆஜர்!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், நடிகருமான அருள் நிதியின் திருமண வரவேற்பு நேற்று மாலை சென்னையில் நடந்தேறியது. இதில் ஆளுநர் ரோசய்யா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நடிகர் ரஜினி காந்த்தும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் இளைய மகன் மு.க.தமிழரசுவின் மகன் அருள் நிதி. இவருக்கும், கீர்த்தனாவுக்கும், திருமண வரவேற்பு நேற்று மாலை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டார். மணமக்களுக்கு வாழ்த்து கூறிய அவர் கருணாநிதியிடமும் நலம் விசாரித்தார். அதேபோல நடிகர் ரஜினிகாந்த், மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தாரும் திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர்.
இதேபோல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, நடிகர் சத்யராஜ், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இன்று வருவாரா விஜயகாந்த்?
திருமண வரவேற்பில் முக்கிய ஆப்சென்ட் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவருக்குப் பதில் அவரது மச்சான் சுதீஷ் வந்திருந்தார். ஒருவேளை திருமணத்திற்கு அவர் வரலாம் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications