For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்டதற்கு ராமதாஸ் கண்டனம்! 7 தமிழரை விடுவிக்க கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: வேலூர் மத்திய சிறையில் சக கைதியான ராஜேஷ் கண்ணா, பேரறிவாளனை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்தும் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் செய்யாத குற்றத்திற்காக சிறையில் உள்ள பேரறிவாளனை சக கைதி ஒருவர் தாக்கியுள்ளதை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளேன். இந்த தாக்குல் கடும் கண்டனத்திற்குரியது.

இந்தத் தாக்குதலில் பேரறிவாளனின் மண்டை உடைந்து, தலையில் தையல் போடப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு தொடர் மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

ramaodss

பேரறிவாளன் மீதான இந்தத் தாக்குதல் எதிர்பாராமல் நடந்ததாக கருத முடியாது. அவரை சக கைதிகள் தாக்க எந்தவிதமான காரணமோ, நியாயமோ இல்லை. ஏனெனில், கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், மற்ற கைதிகளிடம் நட்புடன் பழகி வருபவர். மேலும் அவர் சக கைதிகளுக்கு பாடம் கற்பித்து வரும் ஆசிரியராகவும் இருந்து வருகிறார். இதனால் மற்ற கைதிகள் பேரறிவாளன் மீது மரியாதை கொண்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் பேரறிவாளன் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் ஆபத்தான சதித் திட்டம் இருப்பதாகக் தோன்றுகிறது. பேரறிவாளனுடன் ஒரே அறையில் இருந்த ராஜேஷ் கண்ணா சில நாட்களுக்கு முன் வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதற்கு பேரறிவாளன்தான் காரணம் என்று ராஜேஷ் கண்ணா கருதியதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்திருக்கலாம் என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராஜேஷ் கண்ணா ஏன் இடமாற்றம் செய்யப்பட்டார்? பேரறிவாளன் மீதான தாக்குதலை காவலர்கள் ஏன் தடுத்து நிறுத்த வில்லை? கைதியின் கையில் இரும்பு கம்பி எப்படி கிடைத்தது? என ஏராளமான கேள்விகளும் ஐயங்களும் எழுகின்றன. ஆனால் இந்த கேள்விகளுக்கெல்லாம் சிறை நிர்வாகத்திடம் பதில் இல்லை.

இந்நிலையில், பேரறிவாளன் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. ஏற்கனவே அவர் சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டவர். மேலும், இந்த தாக்குதலுக்கு பின்னர் அவரை அங்கேயே தொடர்ந்து வைத்திருப்பது நல்லது அல்ல.

ராஜீவ் காந்தி கொலையில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்றும், அவர் அளித்த வாக்குமூலத்தை திரித்து எழுதியதால்தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான தியாகராஜன் கூறியிருக்கிறார். பேரறிவாளன் உள்ளிட்ட 3 தமிழர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த உச்சநீதிமன்றம், அவர்கள் 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்ட நிலையில் விடுதலை செய்ய தடையில்லை என்றும் கூறியுள்ளது.

எனவே, 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் அரசியலமைப்பு சட்டத்தின் 161வது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். இதற்கான நடைமுறைகளை பூர்த்தி செய்ய தாமதமானால், அதுவரை 7 பேரையும் சிறை விடுப்பில் தமிழக அரசு அனுப்ப முன் வர வேண்டும். சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்டது பற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

PMK founder Dr S. Ramadoss sought a enquiry into the attack of Perarivalan in Vellur Cental Prison.

வேலூர் மத்திய சிறையில் சக கைதியான ராஜேஷ் கண்ணா, பேரறிவாளனை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்தும் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

-------- Forwarded Message --------
Subject: ramadoss
Date: Tue, 13 Sep 2016 14:24:32 +0530
From: Amudhavalli J
To: Arivalagan
CC: Madhivanan MS

Ramadoss seeks enquiry into Perarivalan attack

ramadoss, perarivalan attack, prison, rajesh kanna, ராமதாஸ், பேரறிவாளன்,
சிறை தாக்குதல், ராஜேஷ் கண்ணா

சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்ட விவகாரம்.. விசாரணை தேவை.. ராமதாஸ் கோரிக்கை

சென்னை: வேலூர் மத்திய சிறையில் சக கைதியான ராஜேஷ் கண்ணா, பேரறிவாளனை
இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்தும் சிறையில்
உள்ள 7 தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர்
ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் செய்யாத குற்றத்திற்காக சிறையில் உள்ள
பேரறிவாளனை சக கைதி ஒருவர் தாக்கியுள்ளதை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும்
அடைந்துள்ளேன். இந்த தாக்குல் கடும் கண்டனத்திற்குரியது.

இந்தத் தாக்குதலில் பேரறிவாளனின் மண்டை உடைந்து, தலையில் தையல்
போடப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு தொடர் மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

பேரறிவாளன் மீதான இந்தத் தாக்குதல் எதிர்பாராமல் நடந்ததாக கருத முடியாது.
அவரை சக கைதிகள் தாக்க எந்தவிதமான காரணமோ, நியாயமோ இல்லை. ஏனெனில்,
கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், மற்ற
கைதிகளிடம் நட்புடன் பழகி வருபவர். மேலும் அவர் சக கைதிகளுக்கு பாடம்
கற்பித்து வரும் ஆசிரியராகவும் இருந்து வருகிறார். இதனால் மற்ற கைதிகள்
பேரறிவாளன் மீது மரியாதை கொண்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் பேரறிவாளன் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில்
ஆபத்தான சதித் திட்டம் இருப்பதாகக் தோன்றுகிறது. பேரறிவாளனுடன் ஒரே அறையில்
இருந்த ராஜேஷ் கண்ணா சில நாட்களுக்கு முன் வேறு அறைக்கு
மாற்றப்பட்டுள்ளார். அதற்கு பேரறிவாளன்தான் காரணம் என்று ராஜேஷ் கண்ணா
கருதியதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்திருக்கலாம் என்று சிறை நிர்வாகம்
தெரிவித்துள்ளது. ராஜேஷ் கண்ணா ஏன் இடமாற்றம் செய்யப்பட்டார்? பேரறிவாளன்
மீதான தாக்குதலை காவலர்கள் ஏன் தடுத்து நிறுத்த வில்லை? கைதியின் கையில்
இரும்பு கம்பி எப்படி கிடைத்தது? என ஏராளமான கேள்விகளும் ஐயங்களும்
எழுகின்றன. ஆனால் இந்த கேள்விகளுக்கெல்லாம் சிறை நிர்வாகத்திடம் பதில் இல்லை.

இந்நிலையில், பேரறிவாளன் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக
தோன்றுகிறது. ஏற்கனவே அவர் சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டவர். மேலும்,
இந்த தாக்குதலுக்கு பின்னர் அவரை அங்கேயே தொடர்ந்து வைத்திருப்பது நல்லது அல்ல.

ராஜீவ் காந்தி கொலையில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்றும், அவர் அளித்த
வாக்குமூலத்தை திரித்து எழுதியதால்தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும்
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான தியாகராஜன் கூறியிருக்கிறார். பேரறிவாளன்
உள்ளிட்ட 3 தமிழர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த
உச்சநீதிமன்றம், அவர்கள் 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்ட நிலையில்
விடுதலை செய்ய தடையில்லை என்றும் கூறியுள்ளது.

எனவே, 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும்
அரசியலமைப்பு சட்டத்தின் 161வது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசு விடுதலை
செய்ய வேண்டும். இதற்கான நடைமுறைகளை பூர்த்தி செய்ய தாமதமானால், அதுவரை 7
பேரையும் சிறை விடுப்பில் தமிழக அரசு அனுப்ப முன் வர வேண்டும். சிறையில்
பேரறிவாளன் தாக்கப்பட்டது பற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK founder Dr S. Ramadoss sought a enquiry into the attack of Perarivalan in Vellur Cental Prison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X