காவிரியில் தண்ணீருக்குப் பதில் கண்ணீர் தான் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது : ராமதாஸ்
காவிரியில் இருந்து தண்ணீருக்குப் பதில் கண்ணீர் தான் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது என்று ட்விட்டரில் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை : தமிழக அரசு காவிரி தண்ணீரைப் பெற்றுத்தருவதற்கு பதில் கண்ணீரை மட்டுமே பெற்றுத்தந்துள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில், தமிழகத்துக்கான காவிரி நீர் அளவை 177.25 டிஎம்சியாக உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்ட தீர்ப்பில் குறைத்துள்ளது. இதன் பிறகு இந்த வழக்கில் எந்த வித மேல்முறையீடும் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஏற்கனவே 2007ம் ஆண்டு நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்கப்பட்ட உத்தரவை விட, தற்போதைய தீர்ப்பு காரணமாக தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைவாக கிடைக்கும்.
ஆனால், கர்நாடகத்திற்கு 14 டிஎம்சி கூடுதலாக வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன் மூலம் தமிழக விவசாயிகள் மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.
காவிரியில் தமிழகத்தின் பங்கு 14.74 டி.எம்.சி. குறைக்கப்பட்டது மிகப்பெரிய அநீதி. இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. 1924-ஆம் ஆண்டில் தமிழகத்தின் பங்கு 575.68 டி.எம்.சியாக இருந்தது. இப்போது 404 டி.எம்.சியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு திருத்தப்பட வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 16, 2018
இந்தத் தீர்ப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் வேதனை தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக, காவிரியில் தமிழகத்தின் பங்கு 14.74 டி.எம்.சி. குறைக்கப்பட்டது மிகப்பெரிய அநீதி. இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. 1924-ஆம் ஆண்டில் தமிழகத்தின் பங்கு 575.68 டி.எம்.சியாக இருந்தது. இப்போது 404 டி.எம்.சியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு திருத்தப்பட வேண்டும்! என்று குறிப்பிட்டுள்ளார்.
காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு தண்ணீரைப் பெற்றுத் தரும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கண்ணீரை மட்டுமே பெற்றுத் தந்துள்ளது.
— Dr S RAMADOSS (@drramadoss) February 16, 2018
மேலும், காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு தண்ணீரைப் பெற்றுத் தரும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கண்ணீரை மட்டுமே பெற்றுத் தந்துள்ளது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications