For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிகாரிகள் வாங்கும் லஞ்சத்தில் பங்கு கேட்பாரா தமிழக முதல்வர்? என்ன சொல்கிறார் ராமதாஸ்?

தமிழகத்தில் முதல்வருக்கு பயந்து வாங்கிய லஞ்சத்தை அதிகாரிகள் பதுக்கிக்கொள்வார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஆந்திராவில் முதல்வருக்கு பயந்து அதிகாரிகள் வாங்கிய லஞ்சத்தை திருப்பி தருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் முதல்வருக்கு பயந்து வாங்கிய லஞ்சத்தை பதுக்கிக்கொள்வார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சமீபத்தில் நாடு முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றில், அதிக லஞ்சம் புரளும் மாநிலங்களில் கர்நாடகா முதலிடத்தையும், ஆந்திரா 2வது இடத்தையும் பிடித்தது. இந்த அவப்பெயரை போக்க ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு, புகார் எண் 1100யை அறிவித்தது.

லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் பற்றி பாதிக்கப்பட்டவர்கள் இதில் புகார் தரலாம். புகார் உண்மையாக இருந்தால், லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரே பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு நேரடியாக வந்து பணத்தை தருவதுதான் இந்த திட்டத்தின் சிறப்பம்சமே.

லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கை

லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கை

அதாவது, லஞ்சப்புகாருக்கு உள்ளான ஊழியர் கடும் நடவடிக்கையில் இருந்து தப்ப, தான் வாங்கிய லஞ்சப்பணத்தை உரியவரிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்பதுதான் இதன் சிறப்பம்சம்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

இதற்கு ஆந்திராவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அரசு நடவடிக்கைக்கு பயந்து அரசு ஊழியர்கள் லஞ்ச பணத்தை திருப்பி கொடுத்துள்ளனர்.

திருப்பி தருகிறார்கள்

இந்நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ஆந்திராவில் முதல்வருக்கு பயந்து வாங்கிய லஞ்சத்தை அதிகாரிகள் திருப்பித்தருகின்றனர்.

பதுக்கி கொள்வார்கள்

பதுக்கி கொள்வார்கள்

தமிழகத்தில் முதல்வருக்கு பயந்து வாங்கிய லஞ்சத்தை பதுக்கிக்கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார். முதல்வர் பங்கு கேட்பார் என பயந்து அதிகாரிகள் பதுக்கி கொள்வார்கள் என்பதை போல் உள்ளது அவரது கருத்து. ராமதாஸின் இந்தக் கருத்தை 200க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

English summary
PMK founder Ramadoss says in his twitter page that In Andhra officials giving back the bribe ammount to the public by the fearness of CM. But in Tamilnadu govt official will hide the bribe ammount by the fearness of CM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X